டெல்லி செல்லும் ஜெ... பாஜக கூட்டணியில் அதிமுக இணைகிறதா?
சென்னை: பிரதமர் மோடியை வரும் 14ம் தேதி டெல்லியில் சந்திக்கப் போகிறார் முதல்வர் ஜெயலலிதா. இந்த சந்திப்பின் நோக்கம் பற்றி இப்போதே பலவித யூகங்கள் உலா வர ஆரம்பித்து விட்டது. டெல்லிக்குச் செல்வதன் முக்கிய நோக்கமே, பா.ஜ.க அரசில் அங்கம் வகிப்பதைப் பற்றி விவாதிக்கத்தான் என்கிறார் பா.ஜ.கவின் மூத்த நிர்வாகிகள்.
பாஜக தமிழக தலைவர்களுடன் ஜெயலலிதாவிற்கு இணக்கமான சூழ்நிலை இல்லை என்றாலும் டெல்லி தலைவர்களிடம் நட்பு பாராட்டியே வருகிறார். 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது மோடியா? லேடியா? என்று கேட்டு பிரச்சாரம் செய்த நிலையிலும், வெற்றி பெற்று பிரதமரான பின்னர் போயஸ்கார்டனுக்கே வந்து விருந்து உண்டார் மோடி.

முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடி இடையேயான நட்பு மட்டுமல்லாது மத்திய அமைச்சர்கள் பலரும் முதல்வர் ஜெயலலிதா உடன் நட்பு பாராட்டியே வருகின்றனர். எனவேதான் சட்டசபைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, அன்று காலை 10 மணிக்கே தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி.
இதுதான் இப்போது சிக்கலாகி விட்டது. வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று முடிவதற்கு முன்பே வாழ்த்து தெரிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன?' என்ற கேள்வியை நேற்று எழுப்பியிருந்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. இதற்கு அ.தி.மு.க தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இன்று அதே கேள்வியை ஈவிகேஎஸ் இளங்கோவன் கேட்டுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக மோடியை சந்திக்க 14ம் தேதி டெல்லிக்குச் செல்கிறார் ஜெயலலிதா. டெல்லிக்குச் செல்வதன் முக்கிய நோக்கமே, பா.ஜ.க அரசில் அங்கம் வகிப்பதைப் பற்றி விவாதிக்கத்தான் என்கிறார் பா.ஜ.கவின் மூத்த நிர்வாகி.
சட்டசபைத் தேர்தலில் கூட, பா.ஜ.கவுக்கு அ.தி.மு.க சீட் வழங்கலாம் என பா.ஜ.கவின் ஒருபிரிவினர் பேசி வந்தனர். இதனால் சிறுபான்மை ஓட்டுக்கள் கிடைக்காது என்பதால் அ.தி.மு.க தலைமை செவிசாய்க்கவில்லை. இப்போது மத்திய அரசில் அங்கம் வகிப்பது சரியானதாக இருக்கும் என்ற முடிவுக்கு முதல்வர் வந்துவிட்டார் என்கின்றனர் பாஜகவினர்.
இந்த முடிவை தேர்தலுக்கு முன்பே எடுத்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. தேர்தல் முடிவுகளைப் பொறுத்து தீர்மானிக்கலாம்' என அமைதியாக இருந்தார். இதுவரையில், மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்தும் எதிர்த்தும் வந்தது. இனி பா.ஜ.க கொண்டு வரும் மசோதாக்களை பகிரங்கமாகவே ஆதரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டார் ஜெயலலிதா என்றும் பேசுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் 37 எம்.பிக்களுடன் மிகப் பெரிய மூன்றாவது கட்சியாக அ.தி.மு.க அங்கம் வகிக்கிறது. மேல் சபையிலும் அ.தி.மு.கவின் தயவு மத்திய அரசுக்குத் தேவைப்படுகிறது. இது தவிர, பா.ஜ.க அரசு கொண்டு வரவிருக்கிற பல மசோதாக்களுக்கு அ.தி.மு.க உறுப்பினர்களின் ஆதரவு மிக முக்கியமானதாக இருக்கிறது.
ஏற்கெனவே, மத்திய அரசில் துணை சபாநாயகர் பதவியை வகித்து வருகிறார் தம்பிதுரை. அதே சமயம் கூட்டணியில் இணைவதைப் பற்றி எந்தப் பிடியும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் முதல்வர் ஜெயலலிதா.இதுதொடர்பாக, போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி. இது அரசியல் அரங்கில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இது ஒருபுறம் இருந்தாலும், தமிழக அரசின் மீதுள்ள இரண்டரை லட்சம் கோடி கடன் சுமை, அரசை வழிநடத்துவதில் ஏகப்பட்ட சிக்கல்களை உருவாக்கிவிட்டது. சட்டமன்றத் தேர்தலில் கொடுக்கப்பட்ட இலவச வாக்குறுதிகளை நிறைவேற்ற கட்டாயமும் அ.தி.மு.க தலைமைக்கு இருக்கிறது. இவற்றைத் தீர்க்க வேண்டுமானால், மத்திய அரசின் தயவு இல்லாமல் நிறைவேற்ற முடியாது.
இனி வரும் காலங்களில் தமிழக சட்டசபையில் அரசின் கடன் பிரச்னை, தேர்தல் வாக்குறுதிகள் போன்றவை அ.தி.மு.கவுக்கு தீவிர தலைவலியாக மாற இருக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான நிதியைப் பெறுவதற்கு, மத்திய அரசோடு இணக்கமான உறவோடு இருந்தால்தான் முடியும் என்று முதல்வர் நம்புகிறார்.
எனவே, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்காமல், என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் முடிவில் இருக்கிறார் முதல்வர். இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சமாளிக்க மத்திய அரசுக்கு, அ.தி.மு.க பக்கபலமாக இருக்கும். அடுத்து வரக் கூடிய லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி அமையவும் இது அச்சாரமாக இருக்கும் என்கின்றனர் பாஜகவினர்.
அதே நேரத்தில் தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மத்திய அரசோடு இணக்கமான போக்கை, அம்மா கடைபிடித்து வருகிறார். மத்திய அரசில் அங்கம் வகித்து குடும்ப உறுப்பினர்களுக்கு வேண்டிய பதவிகளை வாங்கிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லை என்கின்றனர் அதிமுகவினர்.
தமிழ்நாட்டின் அடிப்படை பிரச்னைகளைத் தீர்ப்பது குறித்துதான் நாள்தோறும் சிந்தித்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர். இதுபோன்ற அவதூறு செய்திகளைப் பரப்பி எங்களை பலவீனப்படுத்தும் முயற்சியில் தி.மு.க இறங்கினால், மேலும் மேலும் அவர்கள் தோற்றுத்தான் போவார்கள் என்கின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா எப்பொழுது எத்தகைய முடிவெடுப்பார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கே யூகிக்க முடியாது. ஜூன் 14ம் தேதி ஜெயலலிதா டெல்லி சென்று மோடியும் பேசுவதைப் பொறுத்துதான் அரசியல் வானில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும்.
-
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி












Click it and Unblock the Notifications