பாலமேடு அருகே தடையை மீறி 'வட மஞ்சு விரட்டு' போலீசார் தடுத்ததால் பரபரப்பு !
மதுரை: பாலமேடு அருகே தடையை மீறி வட மஞ்சு விரட்டு நடத்தியதை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடைவிதித்து. இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டித்து அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள், மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் பாலமேட்டில் காலை மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருப்பு சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கண்டன பேரணி நடத்தினார்கள்.
இந்நிலையில் பாலமேடு அருகே உள்ள ராஜா கல்பட்டியில் வட மஞ்சு விரட்டு போட்டி நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது கிராம மக்கள் காளைகளை அவிழ்த்து விட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காளைகள் அவிழ்த்து விடப்படுவதை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையட்டான ஜல்லிக்கட்டுக்கு இந்தாண்டும் தடைவிதிக்கப்பட்டுள்ளது மதுரை, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுர் உள்ளிட்ட கிராம மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications