சிறுத்தை புலி நடமாடுவதாக தகவல்... பீதியில் தாம்பரம் பகுதி மக்கள்!

தாம்பரம் பீர்க்கன்கரணை அடுத்து உள்ளது சதானந்தபுரம். சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதிக்கு அருகில் வண்டலூர் உயிரியல் பூங்காவையொட்டிய வனப் பகுதி அமைந்துள்ளது. சதானந்தபுரத்தை அடுத்து நெடுங்குன்றம் கிராமம் உள்பட பல கிராமங்கள் உள்ளன.
இந்நிலையில் நேற்றிரவு வன ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள பீர்க்கன்கரணை நெடுங்குன்றம் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார் சதானந்தபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர். அப்போது மான் ஒன்று வேகமாக சாலையைக் கடந்ததை அவர் கண்டுள்ளார். உடனடியாக மான் ஓடிவந்த திசையில் காட்டுக்குள் பார்த்த போது, அங்கு சுமார் 2 அடி உயரம் 3 அடி நீளத்தில் ஒரு சிறுத்தை புலி நின்றதாகவும், ரமேசைப் பார்த்து அது மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடிச் சென்று மறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார் ரமேஷ். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வன அதிகாரி கிருஷ்ணகுமார் தனது குழுவுடன் சிறுத்தை புலியின் கால் தடம் எதுவும் பதிவாகி உள்ளதா என்று பார்த்தார். ஆனால், எதுவும் சிக்கவில்லை.
வண்டலூர் பூங்காவில் இருந்து சிறுத்தைப் புலி தப்பி வந்திருக்குமோ என்ற அப்பகுதி மக்களின் சந்தேகத்திற்கு வன அதிகாரி கிருஷ்ணகுமார், அவ்வாறு தப்பி வர வாய்ப்பில்லை எனப் பதிலளித்தார்.
மேலும், பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்திய அவர், சிறுத்தை புலியை பிடிக்க விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும் இடம் அருகே 2 கூண்டுகளும், பல இடங்களில் காமிராவும் பொருத்தப்படும் எனத் தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications