சேர்ந்து வாழ மறுத்த கணவர்.. அடித்தே கொன்ற மனைவி.. உளுந்தூர்பேட்டை அருகே அதிர்ச்சி
உளுந்தூர் பேட்டை அருகே சேர்ந்து வாழ மறுத்த கணவரை மனைவி அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர் பேட்டை அருகே சேர்ந்து வாழ மறுத்த கணவரை மனைவி அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மனைவியை கைது செய்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் பகுதியை சேர்ந்தவர் சீமோன். 44 வயதான இவர் விவசாயியாக உள்ளார். இவரது மனைவி ஜோஸ்பின்மேரி. இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். ஜோஸ்பின்மேரி தன் கணவரை அடிக்கடி சந்தித்து ஒன்றாக குடும்பம் நடத்துவோம் என பலமுறை கூறி வந்துள்ளார்.
சேர்ந்து வாழ ஒத்துழைக்கவில்லை
அதற்கு சீமோன் ஒத்துவரவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை சீமோன் தனது வயலில் வேலைபார்த்து கொண்டிருந்தார். ஜோஸ்பின்மேரியும், சீமோனின் தம்பி ஜான்பீட்டரும் அங்கு வந்தனர்.
உருட்டுக்கட்டையால் தாக்கிய மனைவி
ஜோஸ்பின்மேரி தன் கணவரை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். இதற்கு சீமோன் மறுத்ததால் அவர்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஜோஸ்பின்மேரியும், ஜான்பீட்டரும் உருட்டுக்கட்டையால் சீமோனை தலையில் தாக்கினர்.
பலியான சீமோன்
இதில் சீமோன் தலையில் பலத்த காயமடைந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சீமோனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சீமோனுககு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.இருப்பினும் சீமோன் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.
மனைவி, மைத்துனர் கைது
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜோஸ்பின்மேரி மற்றும ஜான்பீட்டர் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சேர்ந்து வாழ மறுத்த கணவனை மனைவியே கொன்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications