தமிழக - கேரளா எல்லையில் ரூ.40 லட்சம் பணம் சிக்கியது
புளியரை சோதனை சாவடியில் ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி: தமிழக - கேரளா எல்லையில் உள்ள புளியரை சோதனை சாவடியில் ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக, கேரளா எல்லையான புளியரை சோதனை சாவடியில் செங்கோட்டை காவல் ஆய்வாளர் பிரதாபன் தலைமையில் வாகன சோதனை நடைப்பெற்றது. இந்த சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து சோதனை நடத்தினர். சோதனையில் அவர்கள் குற்றாலத்தில் சிப்ஸ் கடை நடத்திவரும் சஜிஜான், அன்னமராசா என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் கையில் இருந்த சாக்கு பையை பிரித்து பார்த்ததில் அதில் கட்டுக்கட்டாக 2,000, 500, 100 ரூபாய் நோட்டுகள் சுமார் 40 இலட்சம் பணம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறித்து நடத்திய விசாரணையில் அவர்களிடம் இருந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், நெல்லை மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக, கேரளா எல்லையில் ரூ.40 லட்சம் பிடிபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications