தொடர் கண்காணிப்பில் ஜெயலலிதா.. எய்ம்ஸ் மருத்துவர் மீண்டும் சிகிச்சையளித்தார்: அப்பல்லோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜெயலலிதா உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வர் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். தேவைப்படும், செயற்கை சுவாச உதவி, ஆன்டிபயோடிக்ஸ், ஊட்டச்சத்து சப்ளை, உதவிகரமான தெரபி மற்றும் பிசியோதெரபி சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தொடர் கண்காணிப்பில் ஜெயலலிதா.. எய்ம்ஸ் மருத்துவர் மீண்டும் சிகிச்சையளித்தார்: அப்பல்லோ pic.twitter.com/URGWiUJnFs
— Oneindia Tamil (@thatsTamil) October 10, 2016
எய்ம்ஸ் பேராசிரியர், டாக்டர்., ஜி.கில்நானி, அக்டோபர் 9ம் தேதி மற்றும் 10ம் தேதிகளில் அப்பல்லோவுக்கு மீண்டும் வருகை தந்து, முதல்வரின் உடல்நிலையை பரிசோதித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications