ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நெடுவாசல் மக்கள் மனு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி நெடுவாசல் கிராம மக்கள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் 2 மாதங்களுக்கும் மேலாக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Neduvasal Village People submit memorandum against Hydro Carbon Project

ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது என சட்டசபையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதனிடையே வரும் 15-ந் தேதியன்று புதுக்கோட்டையில் 50,000 விவசாயிகள் பங்கேற்க உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

Neduvasal Village People submit memorandum against Hydro Carbon Project

இதனால் போராட்டத்துக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர நெடுவாசல் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை இன்று நெடுவாசல் கிராம மக்கள் நேரில் சந்தித்தனர்.

அப்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நெடுவாசல் மக்கள், விஜயபாஸ்கரிடம் மனு அளித்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Neduvasal village People met Minsiter Vijabaskar and submitted memorandum against Hydrocarbon Project.
Please Wait while comments are loading...