தேவை 'அம்மா அரசியல்' சட்டம் - சாமி நக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்போதைய உடனடித் தேவை 'அம்மா அரசியலமைப்புச் சட்டம்' என்று ஜெயலலிதா குறித்து சுப்பிரமணியம் சாமி நக்கலடித்துள்ளார்.

முதன்முதலில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கை தொடர்ந்தவர் பாஜக தலைவர் சுப்பிரமணியம் சாமி. கடந்த 18 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த மாதம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது. தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் ஜெயலலிதா.

இந்நிலையில், அம்மா அரசியலமைப்புச் சட்டம் தேவை என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சுப்பிரமணியம் சுவாமி. அதில், அவர் கூறியுள்ளதாவது :

ஜெயலலிதா 1991-95ம் ஆண்டு காலகட்டத்தில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாததை எதிர்த்து தொடர்ந்த வழக்கு இன்று சென்னை கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. தேவை அம்மா அரசியலமைப்புச் சட்டம் என்று கூறியுள்ளார் சாமி.

இதேபோல இன்னொரு டிவிட்டில் அவர் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த டிவிட்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்றது. அந்த கொள்கை முடிவை அமல்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்குக் கோரிக்கை விடுத்து எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார் சாமி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+