நீட் கருணை மதிப்பெண்: சிபிஎஸ்இ தலைவர் மீது கடும் நடவடிக்கை தேவை.. ஸ்டாலின் கோரிக்கை
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க கூடாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க கூடாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளது.இந்த பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்.

இதை மதுரை ஹைகோர்ட் கிளை 49 வினா-விடைகள் தவறாக இருந்ததால் கேள்விக்கு 4 மதிப்பெண் என்று மொத்தமாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றம் சென்றது. நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வாய்ப்பில்லை என்று டெல்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், தமிழில் நீட் தேர்வுஎழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
இதற்கு முழுக்காரணம் சிபிஎஸ்இ மட்டுமே! துரோகத்தை செய்துவிட்டு மாணவர்களை குற்றஞ்சாட்டுவது ஆணவத்தின் உச்சம்!
தமிழில் #NEETExam எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) August 30, 2018
இதற்கு முழுக்காரணம் #CBSE மட்டுமே! துரோகத்தை செய்துவிட்டு மாணவர்களை குற்றஞ்சாட்டுவது ஆணவத்தின் உச்சம்!
தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வெழுத தேர்வு மையங்கள் ஒதுக்கியதில் பிரச்சினை!
— M.K.Stalin (@mkstalin) August 30, 2018
கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடிகளை செய்தது - என நம் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிய #CBSE தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரை வலியுறுத்துகிறேன்!
தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வெழுத தேர்வு மையங்கள் ஒதுக்கியதில் பிரச்சினை!
கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடிகளை செய்தது - என நம் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிய சிபிஎஸ்இ தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரை வலியுறுத்துகிறேன்!, என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications