நீட் மரணங்கள்: தமிழர்களின் சாபம் ஆட்சியாளர்களை இனியும் விட்டு வைக்கக் கூடாது - கெளதமன்
நீட் மரணங்களால் தமிழர்களின் சாபம் ஆட்சியாளர்களை இனியும் விட்டு வைக்கப்படாது என்று இயக்குநர் கெளதமன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : நீட் தேர்வு எழுதுவதற்காகச் சென்ற மாணவனின் தந்தை எர்ணாகுளத்தில் உயிரிழந்து இருப்பது மிகவும் துயரமானது. தமிழர்களின் சாபம் மத்திய ஆட்சியாளர்களை இனியும் விட்டுவைக்காது என இயக்குநர் கெளதமன் தெரிவித்துள்ளார்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்ற மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இயக்குநர் கெளதமன் பேசுகையில், இந்த மரணம் மிகவும் துயரமான செய்தி . இது தமிழகத்தின் மீதும், தமிழ் இனத்தின் மீதும் அறிவிக்கப்பட்டுள்ள போர். தமிழர்களை எந்த வழியிலாவது மத்திய அரசு அழிக்கப்பார்க்கிறது. அதற்கான எடுத்துக்காட்டுதான் இந்த மரணம்.
ஏற்கனவே தமிழக விவசாயிகள், மீனவர்கள் என படிப்படியாக வாழ்வாதரத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, அடுத்ததாக தமிழக மாணவர்களின் கல்வியில் கை வைத்துள்ளது. நீட் தேர்வுக்கான மையங்களை வெளிமாநிலங்களை அமைத்தும் அதில் ஒரு வகையான நடவடிக்கை ஆகும்.
பெட்ரோலிய மண்டலங்கள், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ மையங்களும், வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளும் அமைக்க முடிந்த மத்திய மாநில அரசுகளுக்கு ஏன் நீட் தேர்வு மையங்கள் அமைக்க முடியாதா ?
தொழில்நுட்பம் முன்னேறிவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மத்திய அரசு ஏன் இதை செயல்படுத்த முனையவில்லை? இது எல்லாம் தமிழக மக்களையும் ,மாணவர்களையும் எதிரிகளாக பார்க்கும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதிதான் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏற்கனவே நீட் எமனால் அனிதாவை இழந்தோம், தற்போது மாணவனின் தந்தை கிருஷ்ணசாமியை இழந்துள்ளோம். இன்னும் எத்தனை மரணங்களை மத்திய அரசு எதிர்பார்த்துகாத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், தமிழ் மக்களின் சாபம் இனியும் மத்திய, மாநில ஆட்சியாளர்களை விட்டு வைக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications