For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதீபாவின் உயிரை பறித்த குளறுபடி வினாத்தாள்.. முன்கூட்டியே கடிதம் எழுதி வைத்திருந்தது அம்பலம்

தமிழ் மொழியில் வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்ததால் அதற்குரிய மதிப்பெண்கள் வழங்குமாறு பிரதீபா கடிதம் எழுதி வைத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரதீபா முன்கூட்டியே கடிதம் எழுதி வைத்திருந்தது அம்பலம்- வீடியோ

    விழுப்புரம்: தமிழ் மொழியில் வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்ததால் அதற்குரிய மதிப்பெண்கள் வழங்குமாறு பிரதீபா கடிதம் எழுதி வைத்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவளூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சண்முகம் என்பவரின் மகள் பிரதீபா நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.

    உயிரிழந்த பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண் பெற்றவர் ஆவார். கடந்த ஆண்டு சித்தா படிக்க வாய்ப்பு கிடைத்தும் எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டுமென்று, இந்தாண்டு பிரதீபா நீட் தேர்வு எழுதியிருந்தார்.

    காத்திருந்த பிரதீபா

    காத்திருந்த பிரதீபா

    கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் போதிய பணம் இல்லாததால் அரசு கல்லூரியில் இந்த சேர்ந்து விடலாம் என காத்திருந்தார்.

    39 மதிப்பெண்கள்

    39 மதிப்பெண்கள்

    இந்த நிலையில் அரசு கல்லூரியில் சீட் பெறும் வகையில் இரண்டாம் முறையாக நீட் தேர்வு எழுதிய பிரதீபாவுக்கு 39 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அதனால் மன வருத்தத்தில் இருந்த அவர், எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

    பிரதீபா கடிதம்

    பிரதீபா கடிதம்

    முன்னதாக தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட வினாத்தாளில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தற்கொலை செய்துகொள்ளும் முன்பே பிரதீபா, தமிழ் மொழியில் தவறாக மொழி பெயர்க்கப்பட்ட வினாக்களுக்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

    வலுக்கும் எதிர்ப்பு

    வலுக்கும் எதிர்ப்பு

    மாணவி பிரதீபா மரணத்துக்கு வினாத்தாள் குளறுபடியும் ஒரு காரணமாகியுள்ளது. ஆண்டு தோறும் நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பதால் நீட் தேர்வுக்கான எதிர்ப்பு வலுத்துள்ளது.

    English summary
    Pradeepa has written a letter that neet question paper is translated wrongly. marks should be given to those questions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X