நீட் தேர்வால் அடுத்த மரணம்.. மருத்துவ சீட் கிடைக்காததால் சென்னையில் மாணவி தற்கொலை
சென்னையில் நீட் தேர்வு எழுதி சீட் கிடைக்காததால் மாணவி ஏஞ்சலின் சுருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: சென்னையில் நீட் தேர்வு எழுதி சீட் கிடைக்காததால் மாணவி ஏஞ்சலின் சுருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு காரணமாக ஏற்கனவே தமிழகம் அனிதா, பிரதீபா மாணவிகளை இழந்து உள்ளது. இது இந்தியா முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்தான் இவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது .
இந்த நிலையில் தற்போது இன்னொரு மாணவியும் நீட் தேர்வு காரணமாக பலியாகி உள்ளார்.சென்னையில் நீட் தேர்வு எழுதி சீட் கிடைக்காததால் மாணவி ஏஞ்சலின் சுருதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

யார் இவர்
இவர் சென்னையில் சோலையூரை சேர்ந்தவர். சேலையூரில் நீட் தேர்வு எழுதி போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை. இதனால் மருத்துவ துறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் சென்னையில் பொறியியல் சேர்ந்துள்ளார்.

பெரிய மன உளைச்சல்
இந்த தனியார் கல்லூரியில் இசிஇ பிஇ படித்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு படிக்க விருப்பம் இல்லாமல் பெரிய மன உளைச்சலில் இருந்துள்ளார். 3 மாதமாக மனஉளைச்சலில் இருந்துள்ளார். வீட்டில் இருந்தவர்களிடமும் சரியாக இவர் பேசவில்லை என்று கூறப்படுகிறது.

வீட்டில் தற்கொலை
இந்த நிலையில்தான் இன்று காலை அவர் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். கதவை பூட்டிவிட்டு, ததூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலையில் கதவை திறக்கும் போதுதான் அவரின் பெற்றோருக்கு இந்த தகவல் தெரிந்துள்ளது.

போலீசில் புகார்
இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவிக்கு 19 வயது மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications