ஒருபிடி மண்கூட நெடுவாசலை விட்டு வெளியே போகாது.. 'நீயா நானா' கோபி ஆவேசம்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நெடுவாசல் போராட்டத்தில் 'நீயா நானா' கோபி கலந்துகொண்டு தனது கருத்துகளை கூறினார். அங்கு கூடியிருந்த மக்கள் அதை மிகவும் வரவேற்றனர்.
நெடுவாசலில் இரண்டு வாரமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஊர்ப் பொதுமக்கலூம் இளைஞர்களும் மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் நெடுவாசலுக்கு பக்கத்து ஊர்க்காரர்கள் என்கிற முறையில் இயக்குநர் பாண்டிராஜ் கலந்துகொண்டார். அதே அடிப்படையில் நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபியும் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் பேசிய அவர்,''இந்த மண்ணில் வாழும்போது கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு வாழ்வதுதான் தன்னிறைவு. அதை குலைக்கும் எந்த முயற்சியையும் மக்கள் அனுமதிக்கக் கூடாது. நெடுவாசலில் இருந்து ஒரு பிடி மண் கூட மக்கள் சம்மதம் இல்லாமல் வெளியே செல்லாது'' என கூறினார்.












Click it and Unblock the Notifications