மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்: தப்பி ஓடிய காமுகனுக்கு வலை வீச்சு
சென்னை: சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிய காமுகனை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுவண்ணாரப்பேட்டை சென்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பியூலா. இவரது வீட்டில் 20 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட, அவருடைய நெருங்கிய உறவு பெண் ஒருவர் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். பியூலாவின் வீட்டின் அருகில் அரியலூரைச் சேர்ந்த பிரதீப் (25). என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மனநிலை பாதிக்கப்பட்ட பியூலாவின் உறவு பெண் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட பிரதீப், பியூலா வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அப்போது, அந்த பெண் அதிர்ச்சியில் கூச்சல் போட்டார். பெண்ணின் கூக்குரல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் பியூலா வீட்டுக்கு ஓடி வந்துள்ளனர். இதை கண்ட பிரதீப் அந்த பெண்ணை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இதை தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள், அந்த பெண்ணை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மனநலம் பாதித்த பெண் என்று தெரிந்தும் பலாத்காரம் செய்த காமுகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications