நாளுக்கு நாள் உச்சமடையும் என்.எல்.சி போராட்டம்- நெய்வேலியில் இன்று உண்ணாவிரத போராட்டம்
நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி தொழிலாளர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த கோரி கடந்த 20 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று 20 ஆவது நாளாக அவர்கள் வேலைக்கு செல்லவில்லை. மேலும் மறியல், முற்றுகை என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர, 4 முறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. எனினும் உடன்பாடு ஏற்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
எனவே போராட்டங்களை தொடர்ந்து தீவிரப்படுத்துவது என தொ.மு.ச அண்ணா தொழிலாளர் ஊழியர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி கோரிக்கையை வலியுறுத்தி நெய்வேலி மெயின் பஜார் காமராஜர் சிலை அருகே தனி பந்தல் அமைத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதமிருந்து வருகின்றனர்.
போராட்டத்துக்கு தொ.மு.ச பொதுச்செயலாளர் ராசவன்னியன் தலைமை தாங்கினார். அண்ணா தொழிலாளர் ஊழியர்கள் சங்க தலைவர் அபு, செயலாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்று போராட்டத்தை வாழ்த்தி பேசினர்.
போராட்டத்தையொட்டி காமராஜர் சிலை பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இன்று மாலையில் உண்ணாவிரதம் முடிந்தவுடன் அடுத்த கட்ட போராட்டம் பற்றி தொழிற்சங்கத்தினர் முடிவு செய்து அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.
என்.எல்.சி அனல்மின் நிலையத்தின் உற்பத்தி 2990 மெகாவாட். தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. இன்று 2190 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இது மொத்த மின் உற்பத்தியை விட 800 மெகாவாட் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications