மக்களைத் தேடி திமுக! A டூ Z எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு! நெல்லை மாநகர திமுகவின் புது முயற்சி!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மக்களைத் தேடி திமுக என்ற முழக்கத்துடன் புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளது நெல்லை மாநகர திமுக.

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்பட பாணியில் வீடு வீடாக கட்சி நிர்வாகிகளை அனுப்பி கோரிக்கை மனுக்களை வாங்கி அதனை பிரித்து உரிய அதிகாரிகளுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்ல அனுப்பப்பட்ட மனுக்கள் மீதான பாலோ அப் நடைமுறைகளையும் நெல்லை மாநார திமுக செயலாளர் சுப்ரமணியன் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்.

Nellai DMK has embarked on a new initiative with the slogan Makkalai Thedi Dmk

மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி என்கிற வரிசையில் மக்களைத் தேடி திமுக என்று முன்னெடுத்துள்ள இந்த புதிய முயற்சிக்கு நெல்லை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளன. கோரிக்கை மனுக்களை அரசாங்க அலுவலகங்களுக்கு எடுத்துக்கொண்டு போய் அதிகாரிகளை பார்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

அந்தப் பணிச்சுமையை குறைத்து அலைச்சலை தவிர்த்து இனி வீட்டில் இருந்தபடியே கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற சூழல் நெல்லை மாநகரத்தில் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் இதற்கு முன்னர் திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனோடு இணைந்து மாநில துணைச் செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தான் இது போன்று புதுசு புதுசாக யோசித்து கவனம் ஈர்த்து வருகிறார். இதனிடையே நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், இன்னும் பல புதிய ஐடியாக்கள் அரசியல் கட்சிகள் சார்பில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+