பகலெல்லாம் வெயில் அடிக்குது.. அதிகாலையில் பனி கொட்டுது.. நெல்லையில் மக்கள் அவதி!
நெல்லை: நெல்லை பகுதியில் அடிக்கடி சிதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் குழப்பமடைந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் கொளுத்தும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்திலேயே வெயில் உக்கிரம் காட்ட தொடங்கி விட்டது.
கடந்த சில நாட்களாக பெரும்பாலான நகரங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி விட்டது.

புரட்டியெடுக்கும் வெப்பம்
வேலூர் மற்றும் உள் மாவட்டங்களில் இப்போதே அக்னி நட்சத்திர காலம் போல வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் குளம், ஏரிகளில் தண்ணீர் வற்றி வருகிறது. அணைகளும் வறண்டு வருகிறது.

ஊட்டியிலும் வெயிலடிக்குதே
நிலத்தடி நீர் மட்டமும் வெகு வேகமாக குறைந்து வருவதால் குடிநீர் பஞ்ச அபாயமும் ஏற்பட்டுள்ளது. குளிர் பிரதேசமான ஊட்டி, கொடைக்கானலிலும் வெப்பம் அதிகரித்துள்ளது.

பழ விற்பனை அதிகம்
இந்த வெயிலின் காரண்மாக குளிர்பானங்கள், பழங்கள் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது. அதேபோல நுங்கு, தர்பூஸ் விற்பனையும் களை கட்டியுள்ளது.

நெல்லையில் வினோதம்
இந்த நிலையில் நெல்லையில் வினோதமான சிதோஷ்ணம் நிலவுகிறது. பகலில் வெயிலில் கொளுத்துகிறது. இரவில் அப்படியே தலை கீழாக மாறி விடுகிறது. இரவு 7 மணி முதல் அதிகாலை 2 மணி வரை வெப்பத்தை உணர முடிகிறது. அதன் பிறகு 3 மணியிலிருந்து அதிகாலை 5.30 மணி வரை பனிப்பொழிவு காணப்படுகிறது.

இப்ப எதுக்கு பனி ?
வழக்கமாக மார்கழி, தை மாதங்களில் தான் இந்த அதிகாலை பனிப்பொழிவு இருக்கும். இந்த சிதோஷ்ண நிலை மாற்றத்தால் பொதுமக்கள் பகலில் வெப்பத்திலும், இரவில் பனியிலும் சிக்கி தவித்து வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications