மாநில அளவில் 3வது இடம் பிடித்து நெல்லை அரசு பள்ளி மாணவி முருக பிரியா அசத்தல்!
நெல்லை: அரசு பள்ளி மாணவி ஒருவர் எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநிலத்திலேயே 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். கல்விக்கு பெயர் பெற்ற நெல்லையில்தான் இந்த 'அதிசயம்' நிகழ்ந்துள்ளது.
நெல்லை அரசு பள்ளியை சேர்ந்த முருகபிரியா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 3வது இடம் பிடித்துள்ளார். இவர் பெற்றுள்ள மதிப்பெண் 500க்கு 497 ஆகும்.

499 மதிப்பெண் பெற்ற 2 மாணாக்கர்கள் மாநில அளவில் முதலிடம் பிடித்த நிலையில், 498 மதிப்பெண் பெற்ற 50 மாணாக்கர்கள் 2வது இடம் பிடித்தனர். அந்த வகையில், 497 மதிப்பெண் பெற்ற முருகபிரியா 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
அரசு பள்ளிகளில் கல்வித் தரம் சரியில்லை என்ற குற்றச்சாட்டுடன் தனியார் பள்ளிகளில் அதிக பணம் செலவிட்டு பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோருக்கு, முருகபிரியாவின் சாதனை யோசனையை தூண்டியிருக்கும்.
இதுகுறித்து முருக பிரியா கூறுகையில், எனது பள்ளி தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்கள், நன்கு பயிற்சி கொடுத்தனர். பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். டாக்டர் ஆக ஆசைப்படுகிறேன். இவ்வாறு கூறினார்.
தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் அவருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications