போலீஸ் அதிரடி சோதனை - 22 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
ராதாரபுரம்: கூத்தன்குளியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் 22 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின. இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கிராமம் கூத்தன்குழி. இந்த கிராமத்தில் மீனவ மக்கள் பெரும்பான்மயாக வசித்து வருகின்றனர். இங்குள்ள கீழத்தெரு, மேலத்தெரு மக்களிடையே கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. இதனால் அங்குள்ளவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து பதுக்கி வைப்பதுடன் மோதல் ஏற்படும் போது அவற்றை பயன்படுத்துகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வரும் வெடிகுண்டு கலாச்சாரத்தால் அந்த கிராம மக்கள் இரவில் தூக்கத்தை தொலைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாத நடுவில் கூத்தன்குழியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பெட்டிகளில் புதைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளை தோணடி எடுத்து பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சாந்தாகுரூஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மாலை வள்ளியூர் துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையிலான போலீசார் கூத்தன்குழியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 22 நாட்டு வெடிகுண்டு சிக்கியது. இது தொடர்பாக கூத்தன்குழியை சேர்ந்த சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அங்கு பதறறம் நிலவுவதால் இந்த வெடிகுண்டு சோதனை தொடரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications