கலெக்டர் தடையையும் மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள்... நெல்லை மக்கள் அதிர்ச்சி!
நெல்லை: நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சில தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கூடுதல் கட்டணம் வசூலிக்க கலெக்டர் தடை விதித்திருந்தும் பஸ் நிர்வாகங்கள் அதை கண்டு கொள்ளவில்லை.
நெல்லை சந்திப்பு பகுதியிலிருந்து மேலப்பாளையத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகி்ன்றன.
நெல்லை சந்திப்பிலிருந்து மேலப்பாளையத்திற்கு கொக்கிரகுளம், குறிச்சி, மருத்துவமனை செல்ல அரசு மற்றும் தனியார் பஸ்களில் ரூ.4 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக திடீரென டிக்கெட் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
அனுமதி பெற வேண்டும்...
தனியார் பஸ்களில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றால் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்று கட்டணத்தை உயர்த்த வேண்டும்.
புகார்...
ஆனால் தனியார் பஸ்கள் அதை செய்யாமல் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் செய்தனர்.
எச்சரிக்கை...
இந்நிலையில் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து மாநகர பகுதிகளில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டது.
அலட்சியமான பதில்...
ஆனால் நெல்லை சந்திப்பு மேலப்பாளையத்திலிருந்து இயக்கப்படும் தனியார் பஸ்சில் மட்டும் தற்போது ரூ.5 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இதுகுறித்து கண்டக்டரிடம் கேட்டபோது தனியார் பஸ் நிர்வாகத்திடம் சென்று கேளுங்கள் என அடாவடியாக கூறுவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications