ஒளி விளக்கு சர்ச்சையில் சிக்கிய எஸ்.வி இந்து பள்ளி.. கண் சிகிச்சை முகாமுக்கு நிர்வாகம் ஏற்பாடு
நெல்லையில் உள்ள எஸ்.வி இந்து பள்ளியில் குழந்தைகளுக்கு கண் சிகிச்சை மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
Recommended Video

நெல்லை: நெல்லையில் உள்ள எஸ்.வி இந்து பள்ளியில் குழந்தைகளுக்கு கண் சிகிச்சை மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதே பள்ளிதான் அதிக ஒளி விளக்குகள் பயன்படுத்தி மாணவர்களின் கண்கள் பாதிக்கப்பட காரணமாக இருந்ததாக சர்ச்சையில் சிக்கியது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஏர்வாடி எஸ்.வி இந்து தொடக்கப்பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது. ஆண்டு விழாவை முன்னிட்டு மேடையில் அதிக ஒளி கொண்ட விளக்குகள் வைக்கப்பட்டது.

இதனால் விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. பலருக்கு அதே இடத்தில் கண்களால் சரியாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் 100க்கும் அதிகமான மாணவர்களும், பெற்றோரர்களும் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது அந்த பள்ளி நிர்வாகிகள் மீது ஏர்வாடி காவல்நிலையத்தில் முதற்கட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது அந்த பள்ளியில் கண் சிகிச்சை முகாமுக்கு பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
காலையில் இருந்து முகாம் நடைபெற்று வருகிறது. குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலர் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.
படம் + செய்தி: யு. காதர் மஸ்தான்












Click it and Unblock the Notifications