கொடுமையே.. நெல்லை மக்களுக்கு பெரும் ஷாக்.. 14 நாட்களுக்கு தினமும் 9 மணிநேரம் மின் வெட்டு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் 9 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
14 நாட்களுக்கு தினமும் 9 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளது. செப்டம்பர் 24ம் தேதி முதல் காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் இருக்காது.

அப்படியானால், 14 நாட்களில் மொத்தம் 126 மணி நேரம் மின்சாரம் இருக்காது என்பது கவனிக்கத்தக்கது. செப்டம்பர் 24ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதிவரை 14 நாட்கள் அதாவது, பாதி மாதங்கள் மின்சாரம் இருக்கப்போவதில்லை என்பது மின்சார வாரியத்தின் அறிவிப்பாகும்.
மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் ஏராளமான பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ளன. அரசு அலுவலகங்கள் உள்ளன. இவ்வளவு நீண்ட நேர மின்வெட்டு மக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications