வரலாற்றில் பெரியபாண்டி ஒரு ரியல் ஹீரோ... நெட்டிசன்கள் உருக்கம் #Periyapandi
வரலாற்றில் பெரியபாண்டி ஒரு ரியல் ஹீரோ என்று நெட்டிசன்கள் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.
சென்னை: ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட பெரியபாண்டி வரலாற்றில் ஒரு ரியல் ஹீரோ என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
கொளத்தூரில் நகைக் கடையில் மூன்றரை கிலோ தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கொள்ளை சம்பவத்தில் முக்கியமானவர்களான நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் பதுங்கியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தமிழகத்தில் இருந்து தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் சென்றனர். இன்று அதிகாலை நாதுராம் உள்ளிட்டோரை பிடிப்பதற்காக ராம்பூர்கலா என்ற இடத்தில் செங்கல் சூளைக்கு சென்றனர். அங்கு மறைந்திருந்த நாதுராம் துப்பாக்கியால் சுட்டத்தில் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி வீர மரணம் அடைந்தார். இதுகுறித்து டிவிட்டரில் கருத்துகள் குவிந்து வருகின்றன.
|
வரலாறு பேசும்..
தமிழக காவல்துறையின் அடையாளம் #பெரியபாண்டி சார் போன்ற வீர திலகங்களே.. 💪💪
வரலாற்றில் ஒரு நிஜ ஹீரோ
|
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்
எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாத இழப்பு #பெரியபாண்டி யின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
|
காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லை
மக்களை பாதுகாக்கும் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது.
|
எதார்த்தக் களம்
தீரன் படத்தில் மிகைப்படுத்தப்பட்ட காட்சி னு பாக்கறப்பவே தோனுச்சு -கார்த்தி மொழி பெயர்ப்பாளரோட கொள்ளையர்கள் ஊருக்கே போய் உயிருடன் திரும்புவது
எதார்த்தக் களம் கொடூரமானது
|
கிடைப்பது கடினம்
இதை மாதிரி சின்சியர் போலீஸ் ஆபிசர் கிடைக்கறது கஷ்டம்😭😭 RIP
|
எந்த உதவியும் செய்யவில்லை
தமிழகத்தில் கொள்ளையில் ஈடுபட்ட ராஜஸ்தான் கொள்ளையர்களை தனிப்படை அமைத்து பிடிக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொலை. ராஜஸ்தான் காவலர்கள் கொள்ளையர்களை பிடிக்க எந்த ஒரு உதவியும் செய்ய முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தீரன் அதிகாரம் 2?












Click it and Unblock the Notifications