இரும்பை காயலான் கடைக்கு போட்டு ஆஸ்பெட்டாஸ் வாங்கி மாட்டிட்டாரே நாஞ்சில் சம்பத்!
சசிகலா அணியின் நாஞ்சில் சம்பத்தின் 'ஆஸ்பெட்டாஸ் கோட்டையான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி' பதிவை நெட்டிசன்கள் வறுத்து கொண்டிருக்கின்றனர்.
சென்னை: ஜெயலலிதா மறைந்தது முதலே அதிமுகவினர் எப்போபார்த்தாலும் அதிமுக எஃகு கோட்டை; ஆர்கே நகர் எங்கள் இரும்பு கோட்டை என கூவி கூவியே காதில் ரத்தம் வந்துவிட்டது. இப்போது இரும்பை எடைக்கு போட்டுவிட்டார்கள் போல.. அதனால்தான் என்னவோ அதிமுகவின் அசைக்க முடியாத ஆஸ்பெட்டாஸ் கோட்டை ஆர்கே நகர் தொகுதி என நாஞ்சில் சம்பத் எழுதிவிட்டார் என்கின்றனர் நெட்டிசன்கள்.
தமிழ்ப் புலமை மிக்கவர் நாஞ்சில் சம்பத்.. அவரது அடுக்குமொழி பேச்சு அனைவரையும் கவரக் கூடியதுதான். ஆனால் சசிகலா அணிக்கு போன பின்னர் என்ன பேசுகிறோம் எதை எழுதுகிறோம் என்பது புரிபடாமல் அடித்துவிட்டு வருகிறார்.

சோறா? வேறா?
அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் நாஞ்சில் சம்பத் எழுதும் பதிவுகளுக்கு வந்து விழுகிற வசைகளுக்கு வகை தொகையே இல்லை. அதுவும் பாத்திமா பாபுவை விமர்சிக்கப் போய், சம்பத் உங்க தட்டில் இருப்பது சோறா?வேறா என நாறடித்துவிட்டார்.

கச்சேரி தொடருகிறது
ஆனால் நாஞ்சில் சம்பத் அசரவில்லை.... தொடர்ந்தும் தம்முடைய தமிழ்ப் புலமையால் சசிகலா அணிக்கான கச்சேரியை நடத்தி வருகிறார்.

ஆஸ்பெட்டாஸ் கோட்டை
இந்த கச்சேரியின் உச்சஸ்தாயில் அவர் பாடிய கவிதைதான் நகைப்புக்குரியதாகிவிட்டது. 'அதிமுகவின் அசைக்க முடியாத ஆஸ்பெட்டாஸ் கோட்டையான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி' என இன்று பதிவிட்டுள்ளார் நாஞ்சில் சம்பத்.

இரும்பை எடைக்கு எடை போட்டாரோ?
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக ஒரு எஃகு கோட்டை; ஆர்.கே.நகர் தொகுதி அதிமுகவின் இரும்புக் கோட்டை என்றே கூறி வந்தனர். இப்போது இரும்புக் கோட்டையை ஆஸ்பெட்டாஸ் கோட்டையாக்கிவிட்டார் நாஞ்சில் சம்பத். அதனால்தான் இரும்பை எடைக்கு எடை போட்டு இப்போது ஆஸ்பெட்டாஸ் வாங்கி மாற்றிவிட்டார் என சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கிறார்கள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications