கர்நாடகாவில் மெர்சல் பார்க்க வந்தவர்களை தாக்கியதை தமிழிசை ஏன் கண்டிக்கவில்லை? வறுக்கும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெர்சல் திரைப்படத்தில் நடிகர் விஜய் பேசிய ஜிஎஸ்டி மற்றும் மருத்துவத்துறை குறித்தான வசனங்கள் புயலை கிளப்பியுள்ளன.

பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை போயுள்ளது. அதேநேரம் நெட்டிசன்களோ, தமிழிசை இதுபோன்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என கூறுகிறார்கள்.

விஜய் பேசியதில் தப்பு இல்லை என்பதே பெரும்பாலான நெட்டிசன்கள் கருத்தாக உள்ளது. தமிழிசையை விமர்சித்து நெட்டிசன்கள் கூறும் கருத்துக்களின் ஒரு தொகுப்பு இதோ:

சரி செய்யுங்களேன்

"இவ்வளவு வரி வாங்கிட்டு இலவச மருத்துவம் தரலையேனு சொன்னா.. அதை சரி செய்ய முயல்வதே அரசின் கடமை, அதைத் தவிர்த்து காட்சியை நீக்கச் சொல்வது கேவலம்" என்கிறார் இந்த நெட்டிசன்.

தமிழிசை எதிர்ப்பு ஏன்?

தமிழிசை மெர்சல் படத்தை பார்த்து கோபப்பட காரணம், ஜிஎஸ்டி பண மதிப்பிழப்பு பற்றியும், மருத்துவ துறையிலுள்ள மாஃபியாக்களை பற்றி பேசியதுதான் என்கிறார் இந்த நெட்டிசன்.

பெட்ரோல் டீசலுக்கு ஜிஎஸ்டி போடுங்க

பெட்ரோல் டீசலுக்கு ஏன் இல்லை GST அவற்றிற்கு கொண்டுவந்தால் மக்களுக்கு அதன் விலை 50 ரூபாய்க்குள் இருக்குமே அதை செய்க முதலில்.

நீங்க நிறுத்துங்க

ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என்கிறார் தமிழிசை. நீங்க GSTய கேன்சல் பண்ணுங்க காட்சிய அவங்க நீக்குவாங்க.

தட்டி கேட்பாரு

பாஜகவுக்கு ஆதரவளித்து தூக்கிவிடவும் தெரியும், தப்பு செய்தால் தட்டி கேட்கவும் தெரியும். அதுதான் விஜயின் தைரியம் என்று இந்த நெட்டிசன் கூறுகிறார்.

கர்நாடக சம்பவம்

கர்நாடகாவில் மெர்சல் படம் பார்க்க வந்த தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதுக்கு கண்டனம் தெரிவிக்க வில்லை தமிழிசை

கோபப்பட்டால்

மெர்சல் படத்துல இன்டர்வியூ சீன்ல ஒரு டாக்டர் கொந்தளிப்பாரு, தப்பு செய்றவனுக்குதான் கோபம் வரும்னு சொல்வாரு விஜய். அது தா ஞாபகம் வருது

நடக்கும் சம்பவம்தானே

சேலம் மாவட்டத்தில், பிளஸ்டூ மாணவன் மருத்துவமனையில் இறந்தார். பணம் கொடுத்தால்தான் சடலத்தை எடுக்க விடுவோம் என மருத்துவமனை கூறியது. அதைத்தான் விஜய் பேசியுள்ளார் என்கிறார் இந்த நெட்டிசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+