பாஜக தலைமையில் புதிய கூட்டணி- திமுக, அதிமுகவுக்கு இடம் கிடையாது: இல. கணேசன்

இல்லம்தோறும் மோடி உள்ளம் தோறும் தாமரை என்ற வாசகத்துடன் கூடிய கிராம யாத்திரை பாஜக சார்பில் நடத்தப்பட்டது. சென்னை மேடவாக்கத்தில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கடந்த 1ம் தேதி யாத்திரையை துவக்கினார். இந்நிலையில் நேற்று யாத்திரையின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது நடந்த பொதுக் கூட்டத்தில் இல. கணேசன் பேசுகையில்,
தமிழகத்தில் திமுக, அதிமுக இல்லாத புதிய கூட்டணியை பாஜக தலைமையில் உருவாக்க நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்த புதிய கூட்டணியில் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சேர்கின்றன. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது, ஊழல் மலிந்து கிடக்கிறது. பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடி தான் முதல்வராக உள்ள குஜராத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். நதிகளை இணைத்து விவசாயத்தில் வளர்ச்சி காண பெரிதும் உறுதுணையாக இருக்கிறார். மோடி பிரதமர் ஆனதும் போடும் முதல் கையெழுத்து சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதற்காகத் தான் இருக்கும்.
காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று கருணாநிதி தெரிவித்திருப்பது திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே உள்ள பூசலின் வெளிப்பாடு. அவர் கூறிய விஷயங்கள் எல்லாம் பிற கட்சிகளுக்காகவோ அல்லது பாஜகவுக்காகவோ கூறிய கருத்தாக நான் கருதவில்லை. இது காங்கிரஸ் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்த விடுக்கப்பட்ட விஷயம் என்று தான் நான் நினைக்கிறேன். திமுக தனது நிலைப்பாட்டை எந்நேரத்திலும் மாற்றும் என்று நினைக்கிறேன். அதனால் அவசரப்பட்டு நான் எந்த முடிவையும் எடுக்க விரும்பவில்லை என்றார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications