இந்திய ராணுவத்தின் தரைப்படை, விமானப் படைகளுக்கு புதிய தளபதிகள் நியமனம்
இந்திய ராணுவ தரைப்படை மற்றும் விமானப்படைகளுக்கு புதிய தளபதிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.
சென்னை: இந்திய ராணுவத்தின் தரைப்படை தளபதியாக இருக்கும் தல்பீர் சிங்கும், விமானப்படை தளபதியாக இருக்கும் அருப் ராஹாவும் இந்த மாதம் 31ம்தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். இதனையொட்டி இந்த படைகளுக்கு புதிய தளபதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
ராணுவத் தலைமைத் தளபதியான தல்பீர் சிங் பதவிகாலம் விரைவில் முடிவடைய உள்ளது. 2 மாதங்களுக்கு முன்புதான் புதிய தலைமைத் தளபதியை தேர்ந்தெடுப்பது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தற்போது துணை தலைமை தளபதியாக உள்ள ஜெனரல் பிபின் ராவத், நாட்டின் 26வது தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 11வது கோர்கா ரைபிள்ஸ்சின் 5வது பட்டாலியனை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் பிபின் ராவத் தரைப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விமானப்படை தளபதி அரூப் ராஹாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவு பெறுகிறது. அதே போல் தற்போது விமானப்படையில் துணை தலைமை தளபதியாக உள்ள ஏர் மார்சல் பி.எஸ்.தனோவா, தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இருவரின் நியமனம் குறித்து மத்திய அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இவர்கள் இருவரும் டிசம்பர் 31ம் தேதி புதிய பதவிகளை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications