அரசியல் தட்பவெப்பம் அறிந்து புதிய, புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன.. சொல்கிறார் ஸ்டாலின்!

அரசியல் தட்பவெப்பம் அறிந்து புதிய புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அரசியல் தட்பவெப்பம் அறிந்து சிறகடிக்கும் புதிய பறவைகள்- ஸ்டாலின்- வீடியோ

    சென்னை அரசியல் தட்பவெப்பம் அறிந்து புதிய புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட்டை இழந்து படுதோல்வியடைந்தது. இதனிடையே நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவது உறுதி எனக்கூறி அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.

    இந்நிலையில் அரசியல் தட்பவெப்பம் அறிந்து புதிய புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    புதிய பறவைகள உயரே..

    புதிய பறவைகள உயரே..

    அரசியல் தட்பவெப்பம் அறிந்து, புதிய புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன. ஜனநாயகம் என்பது எல்லோருக்குமான வானம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நூறாண்டு கடந்தும் திமுக ஓய்வின்றி உயரே பறந்து கொண்டுதான் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    திமுகவுக்கு மட்டுமே உள்ளது

    திமுகவுக்கு மட்டுமே உள்ளது

    தமிழகத்தின் நலன்களை அதிமுக ஆட்சி சிதைத்து சீரழித்து வருவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தை மாற்றக்கூடிய வலிமை, தகுதி திமுகவுக்கு மட்டுமே உள்ளது என்றும் அவர் கூறினார்.

    திமுக சிறகடிக்கிறது..

    திமுக சிறகடிக்கிறது..

    எல்லோருடைய கண்ணும் கருத்தும் திமுகவை நோக்கியே உள்ளன. தமிழக மக்களுக்கு உணர்வூட்டும் இயக்கமாக திமுக சிறகடித்துக் கொண்டு இருக்கிறது என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    வலு இருக்கும் வரை பறப்பார்கள்

    வலு இருக்கும் வரை பறப்பார்கள்

    புதிய பறவைகள் வலு இருக்கும் வரை சிறகடித்துவிட்டு, பாதை தெரியாமல் ஓய்வெடுப்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்றும் ஸ்டாலின் தெரிவத்துள்ளார்.

    ஒவ்வொருவருக்கும் பொறுப்பு

    ஒவ்வொருவருக்கும் பொறுப்பு

    ஒவ்வொரு கட்டத்திலும் கையாள வேண்டிய உத்திகளை வடிவமைக்க பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கட்சி நிர்வாகிகளுடன் கள ஆய்வு நடத்தப்படவுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கட்சியினர் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

    அறிவாலயத்தில் பெட்டி

    அறிவாலயத்தில் பெட்டி

    மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் சந்திப்பும் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். புகார்கள் கருத்துகள், ஆலோசனைகளை அறிவாலயத்தில் உள்ள பெட்டியில் போடலாம் என்றும் அவர் கூறினார்.

    அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்

    அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்

    ஆலோசனை கடிதங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை நிச்சயம் மேற்கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

    களஆய்வு உதவும்

    களஆய்வு உதவும்

    வெற்றியடைய எந்த மாதிரியான உத்திகளை கையாள வேண்டும் என்பதை ஆலோசிக்கவே ஆய்வுக் கூட்டம் என்றும் அவர் கூறியுள்ளார். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு களஆய்வு உதவும் என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+