ஜல்லிக்கட்டு..பொங்கி எழுந்த புதுக்கல்லூரி மாணவர்கள்... மு.க. ஸ்டாலின் பங்கேற்பு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
சென்னை: சென்னையில் வலுத்து வருகிறது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள். புதுக்கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் நெருங்கிவிட்டது நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் தமிழகம் முழுவதும் வெடித்துள்ளன. அந்த வகையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தப் போராட்டத்தில் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இது போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாணவர்களை மேலும் உற்சாசப்படுத்தியுள்ளார்கள்.
போராட்டத்தின் போது, மாணவர்கள் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்தியே ஆக வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், மத்திய மாநில அரசுகள் இதற்கான அனைத்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
கடந்த வாரம், புதுக்கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று கோரி மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications