For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லை அரசு மருத்துவமனைக்கு புது டீன்

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை அரசு மருத்துவ கல்லூரியின் புதிய டீனாக டாக்டர் ராஜசேகர் பொறுப்பேற்றார்.

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 4 தென் மாவட்ட பகுதி மக்களுக்கு உயர் மருத்துவ சேவையை வழங்கி வருகிறது.

இங்கு அதி நவீன ஸ்கேனர், எக்ஸ்ரே, மருத்துவ பரிசோதனை கூடம், ஆபரேசன் தியேட்டர் உள்பட பல வசதிகள் உள்ளதால் உயர் சிகிச்சைக்காக மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பலர் சிகிச்சைக்காக வந்து செல்வர்.

மருத்துவமனையில் டீனாக இருந்த டாக்டர் ரவி சங்கர் கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து ஜூலை 1ம் தேதி முதல் தற்காலிகமாக டாக்டர் சவுந்திராஜன் டீனாக இருந்து வந்தார். இந்த நிலையில் புதிய டீனாக டாக்டர் ராஜசேகர் நியமிக்கப்பட்டார். இவர் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்து பொறுப்புகளை ஏற்றார். அவரிடம் டாக்டர் சவுந்திரராஜன் பொறுப்புகளை ஓப்படைத்தார்.

பின்னர் டாக்டர் ராஜசேகர் நிருபர்களிடம் கூறுகையில், எனது சொந்த ஊர் சேலம் மாவட்டம். எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரான நான், சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் எலும்பியல் துறையில் இயக்குனராக இருந்தேன். இப்போது இங்கு டீனாக பொறுப்பேற்றுள்ளேன்.

நெல்லை பகுதி எனக்கு புதிது. நெல்லை மருத்துவ கல்லூரியின் மேம்பாடு, வளர்ச்சி மற்றும் சிறப்பான சேவைக்கு எனது உழைப்பை கொடுபபேன் என்று தெரிவித்தார்.

டாக்டர் ராஜேசகரின் மனைவியும் டாக்டர்தான். அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றுகிறார். மகள் டாக்டர் திவ்யா, எம்.டி. முடித்துள்ளார். மகன் வங்கிப் பணியில் உள்ளார்.

English summary
Dr Rajasekhar, the new dean has taken charge in Nellai GH. Earlier he was working in Chennai Stanley hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X