For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவில் ஆட்சி மன்றக் குழு தலைவராக சிறையில் இருக்கும் சசிகலா நியமனம்!

அதிமுகவில் ஆட்சி மன்றக் குழு என்று புதிதாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக சசிகலா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் ஆட்சி மன்றக் குழு அமைக்கபப்ட்டுள்ளது என அதன் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொதுச் செயலாளரக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. சசிகலா, அதிமுகவின் பொதுச் செயலாளரக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் சொத்துக்குவிப்பு வழக்கில், தனனை பெற்று பெங்களூரு பரபப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.

New governing body established in Admk

அதையடுத்து, டிடிவி தினகரன், அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது மறைந்த ஜெயலலிதா போயிட்டு ஜெயித்த ஆர்.கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12 ஆம் தேதியன்று இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆனையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஆர்கே நகர் தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ஆட்சி மன்றக் குழு அமைத்துமுடிவுகள் எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
அவ்வாறு கூறிய சில மணிநேரங்களிலேயே ஆட்சிக் குழு குறித்து அறிவித்துள்ளார்.

அதன்படி, ஆட்சிக்குழு தலைவராக சசிகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆட்சிக் மன்றக் குழுவின் உறுப்பினர்களாக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், டிடிவி தினகரன், அ.தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, டாக்டர் பி. வேணுகோபால், ஏ.ஜஸ்டின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இந்தக் குழுதான் ஆர்.கே நகர் தொகுதி இடைத் தேர்தலிலில் அதிமுக சசி அணியின் சார்பாக யார் போட்டியிடுவார்கள் என்று தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

English summary
In Admk new governing body is created and Sasiikala who is presently in jail will be the leader of this governing body.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X