”கத்தி” விவகாரம் முடியும்வரை “புலி” படத்திற்கு தடை விதிக்க வேண்டும் - தஞ்சை கோர்ட்டில் புதிய மனு!
தஞ்சாவூர்: கத்தி பட விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் விரைவில் வெளிவரவுள்ள புலி திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தஞ்சை முதன்மை நீதிமன்றத்தில் அன்புராஜசேகர் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் அன்புராஜசேகர். இவர் தாகபூமி என்ற தன்னுடைய குறும்படத்தை பெரிய திரைப்படமாக வெளியிட காத்திருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் தன்னுடைய கதையை கத்தி என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டதாக இயக்குனர் முருகதாஸ் , தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ், நடிகர் விஜய் ஆகியோர் தனக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி அன்புராஜசேகர் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் ஜனவரி 23 ஆம் தேதி 5 பேரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அன்றைய தினம் எதிர்தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை.
இதனால் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இதன்பின்னர் இரண்டாவது முறையாக மீண்டும் வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அன்புராஜசேகர் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தன் வக்கீல் வடிவேல் மூலம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் "கத்தி பட விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவுள்ள புலி திரைப்படத்திற்கு தடைவிதிக்க வேண்டும். மேலும் இயக்குனர் முருகதாஸ் இனிமேல் இயக்கி தயாரித்து வெளிவரவுள்ள அனைத்து படங்களுக்கும் தடைவிதிக்க வேண்டும்" என அந்த மனுவில் கோரியிருந்தார்.
நேற்று மனு தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ராஜசேகர் வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு இயக்குனர் முருகதாஸ், நடிகர் விஜய் ஆகிய இரண்டு பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications