குடிநீர் தட்டுப்பாடா ? ஹெல்ப்லைனில் அழைத்தால் தண்ணீர் லாரி வரும்.. சென்னை குடிநீர் வாரியம் ஏற்பாடு
பொதுமக்கள் அழைக்கும் இடங்களில் குடிநீர் விநியோகம் செய்ய சென்னை குடிநீர் வாரியம் ஏற்பாடுகளை செய்துள்ளது
சென்னை: குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க பொதுமக்கள் அழைக்கும் இடங்களில் குடிநீர் விநியோகம் செய்ய சென்னை குடிநீர் வாரியம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஹெல்ப்லைன்கள் தரப்பட்டுள்ளன.
வர்தா புயல் கடந்த திங்கட்கிழமை சென்னை அருகே கரையைக் கடந்தது. வர்தா புயலால் சென்னை நகரமே சின்னாபின்னமாக உருக்குலைந்து காணப்படுகிறது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்தன. மின்கம்பங்கள் மீது விழுந்த மரங்களால் நகரின் பல பகுதிகளில் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வர்தா புயல் பாதிப்பால் தொடர் மின் தடை செய்யப்பட்டுள்ளதால் வடசென்னை முழுவதும் கடந்த 3 நாட்களாக குழாய்களில் குடிநீர் வரவில்லை. இதனால் மக்கள், காலி குடங்களுடன் தெரு தெருவாக அலைந்து செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது. ஒருசில இடங்களில் லாரிகளில் குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால், அதுவும் போதுமானதாக இல்லாததால் பலர் குடிநீர் கிடைக்காமல் தவித்தனர்.
இந்தநிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க பொதுமக்கள் அழைக்கும் இடங்களில் குடிநீர் விநியோகம் செய்ய சென்னை குடிநீர் வாரியம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகரில் வர்தா புயல் சேதங்களைக் கருத்தில்கொண்டு, பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, தொலைபேசி மூலமாக குடிநீர் வழங்கக் கோரி அழைத்தால், குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை குடிநீர் வாரியம் செய்துள்ளது.
அதற்காக குடிநீர் லாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் நிரப்பும் நிலையத்தின் வேலை நேரமும், லாரியின் மூலம் விநியோகிக்கும் நடைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கீழ்கண்ட எண்களுக்கு தொடர்புகொண்டு, தேவைக்கு ஏற்ப, 9 ஆயிரம் மற்றும் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளை வரவழைத்து குடிநீரை பெற்றுக்கொள்ளலாம்.
மண்டல வாரியாக தொடர்புகொள்ளும் எண்கள்:
- திருவொற்றியூர் மண்டலம்: 044-25991908
- மணலி மண்டலம்: 044-25553090
- மாதவரம் மண்டலம்: 044-25530100
- தண்டையார்பேட்டை மண்டலம்: 044-25920609,
- இராயபுரம் மண்டலம்: 044-25902651
- திரு.வி.க. நகர்: 044-26505435
- அம்பத்தூர் மண்டலம்: 044-26530929
- அண்ணா நகர் மண்டலம்: 044-26441679
- தேனாம்பேட்டை மண்டலம்: 044-28341448
- கோடம்பாக்கம் மண்டலம்: 044-28153803
- வளசரவாக்கம் மண்டலம்: 044-24866419
- ஆலந்தூர் மண்டலம்: 044-22241315
- அடையார் மண்டலம்: 044-22351145
- பெருங்குடி மண்டலம்: 044-22584288
- சோழிங்கநல்லூர் மண்டலம்: 044-24501695
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications