சென்னையில் களைகட்டிய புத்தாண்டு... மெரினாவில் மக்கள் உற்சாக கொண்டாட்டம் !

சென்னை மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. சென்னை மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

2017ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க சென்னை மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் இளைஞர்கள் நடனமாடியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்தும் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

New Year Celebration in Chennai Marina Beach

மேலும் சென்னையில் உள்ள பல்வேறு பூங்காக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மனமகிழ் மன்றங்களில் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். கேக் வெட்டியும் புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

New Year Celebration in Chennai Marina Beach

அதேபோல், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் குவிந்த ஏராளமானோர், ஆடிப்பாடி புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட் நகரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தனர்.

New Year Celebration in Chennai Marina Beach

புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்டவற்றில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கிறிஸ்தவ தேவாலயங்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. மதுரை, திருச்சி, கோவை, நெல்லை உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+