எனக்கு "புருஷன்" வேணாம்.. தோழியே போதும்.. கடைசி நேரத்தில் தோழியுடன் ஓடிப் போன பெண்!
ஆத்தூர்: சேலத்தில் திருமணமான புதுப்பெண் ஒருவர் தனது பெண் தோழியுடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி ஜெயா.
இவர்களது மகள் கவிதா ஆத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் எம்.காம் முதுகலை பட்டப்படிப்பு படித்தார்.
பிஎட் படிப்பு:
பின்னர் அவர் மல்லியக்கரையில் உள்ள ஒரு கல்வியியல் கல்லூரியில் பி.எட் படித்து வந்தார்.
பொறியாளருடன் திருமணம்:
இவருக்கும் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம் பாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மற்றும் ராணி ஆகியோரின் மகன் மணிகண்டனுக்கும் இடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தனியார் நிறுவனத்தில் வேலை:
மணிகண்டன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
வீடு திரும்பாத கவிதா:
இந்த நிலையில் ஊரில் வசித்து வந்த கவிதா சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டுச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
தோழியுடன் எஸ்கேப்:
இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கவிதா அவருடன் படித்து வந்த தம்மம்பட்டியை சேர்ந்த தோழி ஒருவருடன் சென்றிருப்பதும், இருவரும் இணை பிரியாத தோழிகள், எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
தனிப்படை முயற்சி:
ஆசிரியர் பயிற்சி மாணவிகளான கவிதாவையும் அவரது தோழியையும் கண்டு பிடிக்கும் முயற்சியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
செல்போன்கள் சுவிட்ச் ஆப்:
2 பேருடைய செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனினும் தங்களது உறவினர்களுக்கு வேறு ஏதேனும் தொலை பேசி மூலம் பேசியுள்ளனரா என்பது பற்றியும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications