ஐ.டி. ரெய்டுக்கு பயந்து ராம் நாத்தை ஆதரிக்கிறது அதிமுக… இதுதான் ஜெ. வழியா.. திருநாவுக்கரசர் காட்டம்
ஐ.டி. ரெய்டுக்கு பயந்தே பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத் கோவிந்த்தை அதிமுக ஆதரிக்கிறது என்று திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை அதிமுகவின் இரு அணிகளும் ஆதரித்துள்ளன. இது ஐ.டி. ரெய்டுக்கு பயந்து எடுக்கப்பட்ட முடிவு என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தனது வேட்பாளராக பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது.

எடப்பாடி டீம்
இது தொடர்பாக நேற்று மாலை சென்னையில் தமிழக முதல்வர் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி பாஜக வேட்பாளர் ராம் நாத்தை ஆதரிப்பதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.

ஓபிஎஸ் டீம்
இதே போன்று இன்று ஓபிஎஸ் அணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதிலும், ராம்நாத் கோவிந்த்தை ஆதரிப்பதாக ஓபிஎஸ் அணியினர் முடிவெடுத்து அறிவித்துள்ளது.

கண்டனம்
இதனை கடுமையாக கண்டித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர். இதுகுறித்து அவர் பேசும் போது, அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் பாதைக்கு மாறாக அதிமுக முடிவெடுத்து தவறிழைத்துவிட்டது என்று குற்றம்சாட்டினார்.

ஐ.டி. ரெய்டுக்கு பயந்து..
ஜெயலலிதா இறப்பிற்கு பின்னர், பாஜக அரசு தமிழக அமைச்சர்களின் வீடுகளில் ஐ.டி. ரெய்டு நடத்தியது. ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்றால் பாஜக மீண்டும் ஐ.டி. ரெய்டு நடத்தும் என்று பயந்தே இந்த முடிவை அதிமுக எடுத்துள்ளது என்று திருநாவுக்கரசர் கூறினார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications