நகைக்கடையில் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடிய 4 பெண்கள் – நீலகிரியில் துணிகரம்
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சந்தைப் பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள நகைகளை 4 பெண்கள் ஏமாற்றி திருடிச் சென்றுள்ளனர்.
நேற்று இரவு நகைக் கடைக்கு வந்த 4 பெண்கள், கடைக்காரரிடம் நகை வாங்க வந்திருப்பதாகக் கூறி நகைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது யாரும் அறியாத நேரத்தில் ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து நகைக் கடைக்காரர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், 3 பெண்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், போலீசார் 4 பேரில் நகையுடன் தலைமறைவான பெண்ணையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications