சென்னையில் கள்ளக்காதலால் சிறுவன் கொல்லப்பட்ட விவகாரம்.. தாய் மஞ்சுளா கைது
Recommended Video

சென்னை: கள்ளக்காதலால் சிறுவன் கொல்லப்பட்ட விவகாராத்தில் தாய் மஞ்சுளாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி மஞ்சுளா. மின் வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த தம்பதியின் 9 வயது மகன் ரித்திஷ் சாய். தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்த இவர் டியூஷன் முடிந்து நேற்றிரவு வீடு திரும்பவில்லை.

நாகராஜுடன் கள்ளக்காதல்
இது குறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது மாணவனின் தாய் மஞ்சுளாவுக்கும் சேலையூரில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நாகராஜுக்கும் கள்ளக் காதல் இருப்பது தெரிந்தது.

சிறுவன் கழுத்தறுத்து கொலை
இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் சேலையூரில் பூட்டி இருந்த நாகராஜுன் அறைக்கதவை உடைத்து சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மாணவன் சாய் கொலை செய்யப்பட்டு கிடந்தான்.

அறை முழுவதும் ரத்தக்கறை
அந்த அறை முழுவதும் ரத்த கறை படிந்திருந்தது. சிறுவனை கழுத்தை அறுத்து கொன்று விட்டு நாகராஜ் தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கண்டித்த கணவர்
தாய் மஞ்சுளாவுக்கும் நாகராஜுக்கும் தொடர்பு இருப்பதை மகன் சாய் தனது தந்தையிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் இருவரையும் கார்த்திகேயன் கண்டித்து உள்ளார்.

பழிவாங்கும் நோக்கில்
இதன் காரணமாக அவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கார்த்திகேயன் மற்றும் சிறுவன் சாயை பழிவாங்கும் நோக்கில் நாகராஜ் சிறுவனை கொலை செய்ததாக தெரிகிறது.

தாய் மஞ்சுளா கைது
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிறுவனின் தாய் மஞ்சுளாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுவன் கொலையில் மஞ்சுளாவுக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications