சென்னை சிறுவன் கொலை விவகாரம்.. தாயின் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்!
Recommended Video

சென்னை: 9 வயது சிறுவன் கொடூரமாக அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தாயின் கள்ளக்காதலன் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி மஞ்சுளா. மஞ்சுளத மின்வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களின் மகன் ரித்திஷ், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் சிறுவன் டியூஷன் சென்றுள்ளான்.

பொய் சொல்லி கடத்தல்
இரவு 8.30 மணிக்கு கார்த்திகேயேன் தனது மகன் ரித்திஷை அழைக்க டியூஷன் சென்றபோது அங்கு சிறுவன் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது சிறுவன் எங்கே என விசாரித்த போது நாகராஜ் என்பவர் கண் சிகிச்சைக்காக அழைத்து சென்றதாக தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை
இதைத்தொடர்ந்து கார்த்திகேயன் எம்ஜிஆர் நகர் போலீஸில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் நாகராஜின் தொலைபேசி எண்ணை ட்ராக் செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இன்று காலை வேலூர் பேருந்து நிலையத்தில் நாகராஜ் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.

மூளை சிதறி உயிரிழப்பு
அப்போது நேற்றிரவே சிறுவனை சேலையூரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கொன்று விட்டதாக நாகராஜ் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சேலையூர் வீட்டில் சென்று பார்த்தனர்.
அங்கு சிறுவன் ரித்திஷ் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான். அவனது தலையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு மண்டை உடைந்து மூளை சிதறி கிடந்தது. கழுத்திலும் கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது.

சூப்பர்வைசர் பணி
நாகராஜுக்கும், சிறுவனின் தாய் மஞ்சுளாவுக்கும் கள்ளக்காதல் இருந்ததும் அதனால் ஏற்பட்ட தகராறில் சிறுவனை நாகராஜ் கொலை செய்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக நாகராஜ் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் தான் சேலையூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசர் மற்றும் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பல முறை உல்லாசம்
தனக்கும், கார்த்திகேயன் மனைவி மஞ்சுளாவுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது என்றும் இருவரும் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். சிறுவன் ரித்திஷ் சாயை தான் பலமுறை டியூஷனில் இருந்து அழைத்து சென்று மஞ்சுளாவின் வீட்டில் விட்டிருக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

போலீஸில் புகார்
தங்களின் கள்ளக்காதல் கார்த்திகேயனுக்கு தெரியவந்ததால் தங்களை அவர் கண்டித்ததாகவும் ஆனாலும் தங்களின் கள்ளத்தொடர்பை துண்டிக்கவில்லை என்றும் நாகராஜ் தெரிவித்துள்ளார். கார்த்திகேயன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தன் மீது எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து என்னை ஜெயிலுக்கு அனுப்பினார் என்றும் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

சேலையூர் குடியிருப்பு
இதனால் மனம் உடைந்ததால் அவரை பழிவாங்க சிறுவன் ரித்திஷை கொலை செய்ய முடிவு செய்ததாகவும் அவர் கூறினார். நேற்று மாலை ரித்திஷை டியூஷன் வகுப்பில் இருந்து அழைத்துக் கொண்டு சேலையூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றதாக தெரிவித்தார்.

பீர்பாட்டிலால் கழுத்தில் குத்தி
பின்னர் அவனது கழுத்தில் பீர் பாட்டிலை உடைத்து குத்தியதாகவும் இதனால் ரித்திஷ் கத்தியதால் இரும்பு கம்பியால் சிறுவனின் தலையில் அடித்ததில் சுருண்டு விழுந்து இறந்ததாகவும் நாகராஜ் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications