மல்லையா.. லலித் மோடி.. நீரவ் மோடி.. எப்படி நாட்டை விட்டு சென்றார்கள்?.. அதிர வைக்கும் உண்மை!
விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி எல்லோரும் எப்படி நாட்டைவிட்டு சென்றார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி எல்லோரும் எப்படி நாட்டைவிட்டு சென்றார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் முதல் இருவர் குற்றவாளிகள் என்று தெரிந்த பின் தப்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீரவ் மோடி மீது சிறிய அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்த போதே அவர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இவர்களை மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வர இந்தியா படாதபாடுபட்டுக் கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் அவர்கள் எப்படி நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள் என்று திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.

லேட்
விஜய் மல்லையா, லலித் மோடி இருவரும் நாட்டை விட்டு வெளியேறியதுதான் மிகவும் அதிசயமான ஒன்றாகும். விஜய் மல்லையா, லலித் மோடி இரண்டு பேரும் இங்கு வழக்குகளை சந்தித்துக் கொண்டு இருந்த போது வெளியேறி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சென்ற தகவலே சில நாட்கள் கழித்துதான் இந்தியாவிற்கு தெரிந்துள்ளது.

நாடுகள்
இவர்களின் முதல் விருப்பம் சுவிட்சர்லாந்தாக இருக்கிறது. அதன்பின் இங்கிலாந்து செல்கிறார்கள். அப்படியும் இல்லையென்றால் அமெரிக்க செல்கின்றனர். நீரவ் மோடி அமெரிக்காவில் இருக்கிறார். 1993 மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமான அபு சலீம் போர்சுகல் ஓடிப்போனது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு
இந்த தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பி இருக்கிறது. இவர்கள் கண்காணிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் போது, எப்படி ஏர்போர்ட் அதிகாரிகள், வெளியுறவுத்துறை, பாதுகாப்பு துறை இவர்களை கோட்டைவிட்டது என்ற கேள்வி எழும்பி இருக்கிறது. அதுவும் தீவிரவாதிகள் கூட வெளியேறி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்கெட்ட பின் சூரிய உதயம்
ஆனால் இவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிய பின்தான் இந்திய அரசு இவர்களை தேட உத்வேகம் எடுக்கிறது. அதன்பின்தான் இவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படுகிறது. பாஸ்போர்ட் முடக்கம் நடக்கிறது. ஆனால் குற்றச்சாட்டு எழும் போதே இவர்களின் பாஸ்போர்ட்கள் முடக்கப்படுவதில்லை. இதனால் இவர்கள் எளிதாக தப்பித்து சென்று இருக்கிறார்கள்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications