10 ஆண்டுகால கதையை ஒரே நாளிலெல்லாம் சொல்ல முடியாது... போலீஸாரையே தலை சுற்ற வைத்த நிர்மலா தேவி

10 ஆண்டுகால கதையை ஒரே நாளில் சொல்லி விடமுடியாது என்று பேராசிரியை நிர்மலா தேவி தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மதுரை மத்திய சிறையில் தனது உயிருக்கு ஆபத்து -நிர்மலா தேவி- வீடியோ

    அருப்புக்கோட்டை: மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி போலீஸார் விசாரணையில் 10 ஆண்டுகால கதையை ஒரே நாளில் சொல்லிவிட முடியாது என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

    அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்று்ம அறிவியல் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் மதுரை பல்கலைக்கழக உயரதிகாரிகளின் படுக்கைக்கு பெண்களை சப்ளை செய்ய 4 மாணவிகளிடம் பேசிய ஆடியோ உரையாடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததை அடுத்து நிர்மலா தேவி மீது கல்லூரி நிர்வாகம் புகார் கொடுத்தது. இதையடுத்து போலீஸார் அவரை திங்கள்கிழமை கைது செய்தனர்.

    நீதிமன்றக் காவல்

    நீதிமன்றக் காவல்

    அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்தில் விசாரணைக்கு பிறகு விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் நிர்மலா தேவி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 12 நாட்கள், அதாவது வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    அதிகாரிகள் விசாரணை

    அதிகாரிகள் விசாரணை

    அருப்புக்கோட்டை நகர போலீஸாரிடம் இருந்த இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ. டி.எஸ்.பி. ராஜேஸ்வரி, உதவி விசாரணை அதிகாரியாக மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை கண்காணிப்பாளர் முத்துசங்கரலிங்கம் நியமிக்கப்பட்டனர். இருவரும் நேற்று அதிரடி விசாரணை தொடங்கினர்.

    நகர போலீஸார் ஒப்படைப்பு

    நகர போலீஸார் ஒப்படைப்பு

    அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்திய ஆவணங்கள் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் உள்ளன. நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் 10 ஆண்டு கால கதையை ஒரே நாளில் சொல்லிவிட முடியாது என்று கூறியுள்ளார். இதை கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நிர்மலா தேவி யார்

    நிர்மலா தேவி யார்

    இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் 2008-ஆம் ஆண்டில் அருப்புக்கோட்டையில் கல்லூரியில் உதவி பேராசிரியையாக சேர்ந்தார். அப்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக அவர் சென்று வந்தபோது தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் 2 பேராசிரியர்களுடன் பணி ரீதியில் நிர்மலாவுக்கு தொடர்பு ஏற்பட்டது.

    விரைவில் விசாரணை

    விரைவில் விசாரணை

    கடந்த மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக்காக அவர் சென்றிருந்தார். அப்போது அந்த இரு பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார். விரைவில் இதுதொடர்பாக அந்த இரு பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+