நிர்மலா பெரியசாமி முதல் குஷ்பு வரை.. டிவியில் அடிதடியில் முடிந்த குடும்ப பஞ்சாயத்துகள்
நிர்மலா பெரியசாமி நடத்திய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் தொடங்கி குஷ்புவின் நிஜங்கள் நிகழ்ச்சி வரை அடிதடி பஞ்சாயத்துக்களும் சர்ச்சைகளும் பரபரப்பாகவே உள்ளது.
சென்னை: டிவி நிகழ்ச்சிகளில் ரியாலிட்டி ஷோ, டாக் ஷோ என்ற பெயரில் ஏழைகளின் கண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் அதே போல ஒரு பஞ்சாயத்து நிகழ்ச்சி சன்டிவியில் ஒளிபரப்பாகி பரபரப்பு தீயை பற்ற வைத்துள்ளது.
இது போன்ற நிகழ்ச்சிகளின் ஆரம்பம் என்னவோ அமைதியாகத்தான் போகிறது. நாளாக நாளாக கண்ணீர், கள்ளக்காதல், அடிதடி என டிஆர்பியை எகிற வைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்கின்றனர்.

குடிபோதையில் ஊர்வசி
மலையாளத்தில் நடிகை ஊர்வசி ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறார். பரபரப்பான இந்த ஷோவில் இவர் பெரும்பாலும் குடித்துவிட்டுதான் வருகிறாராம்.
போதையில் வந்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆண்களிடம் இவர் தகாத வார்த்தைகளில் பேசுகிறார் என்று இவர்மீது கேரள மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் ஏற்கனவே புகார் மனு கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்த ஆணையமும் ஊர்வசியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருவர் ஊர்வசியால் தனது வாழ்க்கை சீர்குலைந்துவிட்டது என புகார் கொடுத்துள்ளார்.

செருப்பால் அடிப்பேன்
ஜீ தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் நடிகை கீதா பதுக்கு ஜதகா பன்டி என்ற குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். குஷ்பு நடத்தும் நிகழ்ச்சி போன்று தான் இது. குடும்ப பிரச்சனைகளை கேட்டு பின்னர் மனோதத்துவ நிபுணர்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ஓரினச்சேர்க்கையாளர்களான இரண்டு பெண்கள் கலந்து கொண்டனர். ஆணாக நினைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக இளம்பெண் கூறினார். இதை கேட்ட கீதா அவரைப் பார்த்து, உனக்கு வெட்கமாக இல்லையா, செருப்பால் அடிப்பேன் என்றார்.

லட்சுமி ராமகிருஷ்ணன்
கடவுள் இருக்கான் குமாரு படத்திலும் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பேசுவதெல்லாம் உண்மை என்ற பெயரில் கலாய்த்துள்ளார்கள். இதற்கு படு காட்டமாக தனது டுவிட்டரில் குமுறி தீர்த்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். இவரை கிண்டலடிப்பவர்கள்தான் அதிகம். இவர் பேசும் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்பதை மையப்படுத்தி பாட்டாகவே பாடினார்கள் விஜய் டிவியில் கிண்டல் நிகழ்ச்சியும் ஒளிபரப்பினார்கள்.

வெளிச்சத்துக்கு வந்த கொலைகள்
2012ம் ஆண்டு ஜூன் மாதம், காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி, ஏ.கே.குச்சிப்பாளையத்தில் உள்ள உறவினர் முருகன் வீட்டில் தங்கினர்.அங்கு, தனது ஆசைக்கு இணங்க மறுத்த லாவண்யாவை, முருகன் கொலை செய்து, வீட்டு தோட்டத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் புதைத்தார். லாவண்யாவை தேடி வந்த காதலன் சிலம்பரசன், அவரது தந்தை சேகர் ஆகியோரையும், முருகன் கொலை செய்து, அதே கிணற்றில் புதைத்தார். இதற்கு, முருகனின் மனைவி ராணி, தம்பி மூர்த்தி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, நிர்மலா பெரியசாமியிடம் முருகனின் மகள் பார்கவி அளித்த பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டது

லாரி உரிமையாளர் தற்கொலை
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் நாகப்பன். இவர் மனைவியை விட்டு பிரிந்து மைத்துனியுடன் குடும்பம் நடத்துகிறார்; மகள்களிடம் தவறாக நடக்கிறார் என்ற புகார்களுடன் அண்மையில் ஜீ தமிழ் டிவியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி டிவியில் ஓடிக் கொண்டிருந்த போது இதை ஒளிபரப்ப வேண்டாம் என்று ஜீ தமிழ் டிவி நிர்வாகத்திடம் நாகப்பன் கெஞ்சினாராம். ஆனால் அவர் எதிர்ப்பையும் மீறி நிகழ்ச்சி ஒளிபரப்பானதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற புகார் எழுந்துள்ளது.

அடிதடிகள்
இப்போது புதிதாக குஷ்புவின் நிஜங்கள் நிகழ்ச்சியில் அடிதடி அரங்கேறியுள்ளது. மனைவியையும், அவரது அக்காவையும் தகாத வார்த்தையில் திட்டிய நபரை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் குஷ்பு பாய்ந்து வந்து சட்டையை பிடித்து கீழே தள்ளினார். இந்த அடிதடிதான் பலமுறை முன்னோட்டமாக ஒளிபப்பானது. இன்றைய நிகழ்ச்சியிலும் அடிதடி அரங்கேறியது.

வீதிக்கு வரும் வீட்டு பஞ்சாயத்து
கணவனின் குறைகளை மனைவியும், மனைவியின் குறைகளை கணவனும் நிகழ்ச்சியில் சொல்கிறார்கள். பலர் பார்க்க அடித்துக்கொள்கின்றனர். தகாத வார்த்தைகளால் திட்டிக்கொள்கிறார்கள். ஆனாலும் நிபுணர்களைக் கூப்பிட்டு கவுன்சிலிங் கொடுக்கின்றனர். பலர் முன்னிலையில் பகிரங்கமாக சண்டை போட்ட இவர்கள் எப்படி இணைந்து வாழ்வார்கள் என்பதே கேள்வி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications