அம்மா திரும்பிப் பார்த்தாலே 'ஸ்டைல்'தான்.. 'வணக்க்க்க்கம்' நிர்மலா பலே பேச்சு!
தஞ்சாவூர்: சிலருடைய பேச்சில் சரக்கே இருக்காது.. ஆனாலும் பேச்சின் ஸ்டைலும், சுவாரஸ்யமும் சேர்ந்து ரசிக்க வைத்து விடும்.. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நிர்மலா பெரியசாமி.
அவரேதான், வணக்க்க்க்க்ம் புகழ் நிர்மலா பெரியசாமி. இவர் இப்போது டிவி பிரபலம் மட்டுமல்ல, அதிமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளரும் கூட. ஒரு காலத்தில் திமுகவுடன் நெருக்கமாக இருந்தவர் நிர்மலா. ஆனால் காலம் அவரை அதிமுக பக்கம் கொண்டு போய் நிறுத்தி விட்டுப் போய் விட்டது.
இப்போது அதிமுக மேடைகளைக் கலக்க ஆரம்பித்திருக்கிறது வெண்கலத் தொண்டை கொண்ட நிர்மலாவின் குரல்.

இப்படித்தான் தஞ்சாவூரில் நடந்த அதிமுகவின் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டத்தில் நிர்மலா பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். தனது வழக்கமான பாணியில் வாய் நிறைய புன்னகை தவழ, டிவியில் பேசுவது போலவே நிறுத்தி நிதானமாக, இழுத்துப் பிடித்து அவர் பேசிய பேச்சைக் கேட்டு தொண்டர்கள் குஷியாகிப் போனார்கள். காரணம், அம்மாவை அவர் வர்ணித்த விதம் அப்படி.
நிர்மலா பேசுகையில், வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது என்பதை மாற்றி தெற்கை வாழ வைப்பார் அம்மா. தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையும் அம்மாதான் ஆட்சி செய்வார்கள். அம்மாதான் பிரதமராக வேண்டும். இதைத்தான் நாங்கள் கோரி வருகிறோம்.
அம்மா பிரதமரானால் இலங்கை நம்மைப் பார்த்து பயந்து விடும். ஏன் ஒபாமாவே கூட அம்மா நானும் இந்தியா வந்து விடுகிறேன். எனக்கு இங்கேயே ஓட்டுரிமை தாருங்கள் என்று கேட்பார்.. என்று நிர்மலா கூறியபோது ... அடேங்கப்பா அப்படி ஒரு கைத்தட்டல்.
தொடர்ந்து பேசிய நிர்மலா, அம்மாவுக்கு 7 மொழிகள் தெரியும். அவர் பேசி விட்டுத் திரும்பி அப்படிப் பார்த்தாலே அது ஸ்டைல்தான். அவங்க அழகுக்கு ஈடாகுமா எதுவும்.. என்று மேலும் கூற கூட்டத்தில் விசில் பறந்தது.
நியாயப்படியும், தர்மப்படியும் பார்த்தால் நிச்சயம் நிர்மலாவுக்குத்தான் ராஜ்யசபா சீட் தந்திருக்க வேண்டும் ஜெயலலிதா... ஜஸ்ட் மிஸ் ஆயிருச்சே.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications