2013லேயே விபூதி அடித்த நிர்மலா..எல்பின் இயக்குனரின் சகோதரி.. இங்கிலாந்துக்கு எஸ்கேப் ஆனவர் கைது
திருச்சி: இங்கிலாந்து நாட்டில் இருந்து திரும்பிய எல்பின் நிறுவன நிர்வாக இயக்குனரின் சகோதரியான விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நிர்மலா பல கோடிரூபாய் மோசடி செய்த வழக்கில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வுக்குழு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இயங்கி வந்த எல்பின் நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் வழங்கப்படும் என்றும் நிலம் தருவதாகவும் பல்வேறு கவர்ச்சியான வாக்குறுதிகளை அளித்தது. இதனால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்தனர்.

ஆனால் சொன்னபடி பணத்தை கொடுக்கவும் இல்லை.. கொடுத்த பணத்தையும் மொத்தமாக எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டனர் எல்பின் நிறுவனத்தினர். இது போல் ஏமாற்றிய விவகாரத்தில் எல்பின் இ-காம் பிரைவேட் லிமிடெட், ஸ்பாரோ குளோபல் டிரேட் திருச்சி, ஆர்.எம். வெல்த் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் கோவை, இன்பை கேலக்ஸி மார்க்கெட்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
சென்னை, கோவை, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், பெரம்பலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வழக்குகள் பதியப்பட்டிருந்தது.
ஒழுங்குப்படுத்தப்படாத, முறைப்படுத்தப்படாத வைப்புத்திட்டங்கள் மூலமாக பொதுமக்களை ஏமாற்றி பல கோடிகளை அபேஸ் செய்த நிறுவனங்கள் பணத்தை திரும்பிதரவே இல்லை. அவர்களிடம் பணத்தை வசூலிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் பொதுமக்கள் பணத்தை மோசடி சய்த ஆர்.எம். வெல்த் கிரியேஷன் நிறுவனத்துக்கு எதிராக 2013-ம் ஆண்டு விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு மதுரை முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நிர்மலா (வயது 42) என்பவர் பல ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் அவருக்கு மதுரை முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தால் வாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் நிர்மலா வெளிநாட்டில் இருந்ததால் அவருக்கு காவல்துறை சார்பில் நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தில் லுக்அவுட் நோட்டீசு கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் ஞாயிறு அன்று இங்கிலாந்து நாட்டில் இருந்து சென்னை விமானநிலையத்துக்கு நிர்மலா வந்தார். அவரை சுற்றி வளைத்து திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையடுத்து அவர் மீதான கைது வாரண்டை நிறைவேற்றும் பொருட்டு அவரை மதுரையில் உள்ள முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட நிர்மலா எல்பின் நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜா என்கிற அழகிரிசாமியின் சகோதரி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
2013ம் ஆண்டே எல்பின் நிறுவனத்தின் இயக்குனரின் தங்கையான நிர்மலா மக்களை ஏமாற்றி உள்ளார். வழக்கும் நடந்து வரும் சூழ்நிலையில், புதிதாக அவரது சகோதாரரும் பல கோடிகளை ஏமாற்றி இருக்கிறது. மக்கள் கவர்ச்சியான வாக்குறுதிகளை நம்பி ஏமாறக்கூடாது. எத்தனை சினிமா படங்கள் வந்தாலும் மக்கள் விழிப்பணர்வு அடையவது கிடையாது. மாறாக புதிது புதிதாக திட்டமிட்டு சதுரங்க வேட்டை பாணியில் ஏமாற்றுவது தொடரத்தான் செய்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications