இளைய ஆதின நியமன வழக்கு – நித்தியனந்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது மதுரை உயர்நீதிமன்றம்!
மதுரை: மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக நித்தியானந்தாவை நியமித்ததற்கு மதுரை கோர்ட் விதித்த தடையை நீக்கக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்து விட்டது.

மதுரை ஆதீன மடத்தின் 292-வது மடாதிபதியாக அருணகிரிநாதர் தற்போது பதவி வகித்து வருகிறார். அந்த மடத்தின் 293-வது மடாதிபதியாக அதாவது இளைய மடாதிபதியாக நித்தியானந்தாவை கடந்த 22.4.2012 அன்று அருணகிரிநாதர் நியமனம் செய்தார். இது பெரும் சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் கிளப்பியது. மதுரை ஆதீன மடத்திற்கு நித்தியானந்தா வந்தபோது பெரும் போராட்டங்களும் நடந்தன.
இந்த நிலையில், ஆதீன மடத்தின் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை ஆணையர் மதுரை மாவட்ட முதன்மை சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும், ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, அருணகிரிநாதர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுரை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாக நித்தியானந்தாவை நியமனம் செய்தது ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, இந்து அறநிலையத்துறை தாக்கல் செய்துள்ள முக்கிய வழக்கு முடிவடையும் வரை மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடை விதித்து 26.2.2013 அன்று சப்-கோர்ட் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து நித்தியானந்தா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்தார். அதில், இந்து அறநிலையத்துறை தாக்கல் செய்த மனுவில் என்னை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை. எனது தரப்பு விளக்கத்தை கீழ்கோர்ட் கேட்கவில்லை. எனவே, கீழ்கோர்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அருணகிரிநாதர் தரப்பில் வக்கீல்கள் நாகேந்திரன், ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார். இறுதியில் நித்தியானந்தாவின் அப்பீல் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதுகுறித்து அவர் பிறப்பித்த உத்தரவில், மதுரை ஆதீன மடத்தின் ஆவணங்களை பார்க்கும் போது, ஒரு மடாதிபதி உயிருடன் இருக்கும்போது இன்னொருவரை மடாதிபதியாக நியமிக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதேபோன்று மடாதிபதியாக நியமிக்கப்படுபவர் என்னென்ன தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்பதும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை நித்தியானந்தா பூர்த்தி செய்யவில்லை.
நித்தியானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்து பிறப்பித்த உத்தரவை அருணகிரிநாதர் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதுதொடர்பான வழக்கு தனியாக உள்ளது. எனவே, கீழ்கோர்ட் பிறப்பித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. கீழ்கோர்ட் பிறப்பித்த உத்தரவு சரியானது தான் என்று நீதிபதி கூறி விட்டார்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications