நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடித்து ஒருவர் பலி- 6 பேர் படுகாயம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடித்த ஒருவர் பலியாகி உள்ளார். இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.
நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 1வது சுரங்கத்தில் உள்ள கொதிகலன் குழாய் இன்று முற்பகல் திடீரென வெடித்தது. இதில் பொறியாளர் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டுவரப்படுகின்றனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து நெய்வேலி அனல்மின் நிலைய 1வது சுரங்கத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications