மாணவியுடன் காணாமல் போன சேலம் தமிழ் ஆசிரியருக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை: 10ம் வகுப்பு மாணவியுடன் காதலாகி, தலைமறைவு வாழ்க்கை நடத்திய தமிழாசிரியருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
மேலும் தமிழ்க கலாச்சாரம் குறித்து நன்கு தெரிந்திருந்தும், மாணவிக்குக் காப்பாளராக இருக்க வேண்டிய ஆசிரியரே அவரை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தியதை ஏற்கவே முடியாது என்றும் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது தமிழாசிரியர் ஒருவர், தனது பள்ளியில் 10வது வகுப்பு படித்து வந்த மாணவியுடன் பழகியுள்ளார். பின்னர் அந்த மாணவியை அழைத்துக் கொண்டு போய் விட்டார்.
பல நாட்கள் இருவரும் பல்வேறு ஊர்களுக்குப் போயுள்ளனர். லாட்ஜுகளில் தங்கியுள்ளனர். உடல் ரீதியான உறவிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மகளைக் காணாமல் அவரது பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்திருந்தனர். போலீஸாரும் தேடி வந்தனர்.
இதற்கிடையே, பல நாள் தலைமறைவுக்குப் பின்னர் மாணவியை அவரது ஊரில் கொண்டு வந்து விட்டு விட்டு ஆசிரியர் மீண்டும் ஓடிப் போய் விட்டார்.
மேலும் போலீஸார் தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்திலும் மனு செய்தார்.
அதில் நான் அந்த மாணவியை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தினேன் என்று கூறுவது தவறாகும். அந்த மாணவியே தனது பெற்றோருடன் போக விரும்பவில்லை என்று உள்ளூர் கோர்ட்டில் கூறியுள்ளார் என்று கூறியிருந்தார்.
ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதி நாகமுத்து, ஒரு ஆசிரியர், அதிலும் தமிழாசிரியர், தமிழ்க் கலாச்சாரம் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் மாணவிக்கு காவலராக இருந்திருக்க வேண்டிய அவரே பாலியல் ரீதியாக அவரைப் பயன்படுத்தியிருப்பதை ஏற்கவே முடியாது.
மாணவி தனது பெற்றோருடன் போக விரும்பவில்லை என்று கூறுவதை தான் செய்த குற்றத்தை மறைக்க பயன்படுத்த முடியாது என்று கூறி முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications