இரட்டை இலைச்சின்னத்தை பாதுகாக்க அதிமுகவில் தகுதியானவர்கள் இல்லை.. சொல்கிறார் தமிழிசை
இரட்டை இலை சின்னத்தை பாதுகாக்க தகுதியானவர்கள் அதிமுகவில் இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரட்டை இலைச்சின்னத்தை பாதுகாக்க தகுதியானவர்கள் தற்போது அதிமுகவில் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளளார்.இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதன் பின்னணியில் பாஜக இருப்பதாக கூறுபவர்கள் அரசியல் தெரியாதவர்கள் என்றும் தமிழிசை சாடியுள்ளார்.
சசிகலா அதிமுகவும் ஓபிஎஸ் அதிமுகவும் இரட்டை இலைச்சின்னத்துக்கு போட்டி போட்டன. இதனால் அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கி வைத்தது.
இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை மின்கம்பமும் சசிகலா தரப்புக்கு தொப்பியும் சின்னமாக ஒதுக்கப்பட்டது.ஆர்கே நகரில் போட்டியிடும் இருகட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

குற்றச்சாட்டுக்கு தமிழிசை மறுப்பு
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் சென்னை ஆர்கே.நகரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஓபிஎஸ் துனையுடன் பாஜக தமிழகத்தில் காலுன்ற பார்க்கிறது என்ற அதிமுக எம்பி அன்வர் ராஜா குற்றம் சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.

தகுதியானவர்கள் இல்லை
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதன் பின்னணியில் பாஜக உள்ளது என்று கூறுபவர்கள் அடிப்படை அரசியல் தெரியாதவர்கள் என்றும் அவர் கூறினார். எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்டு ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பாதுகாக்க தகுதியானவர்கள் தற்போது அதிமுகவில் இல்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

முடக்கம் சரியான முடிவு
இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது சரியான முடிவு தான் என்றும் அவர் கூறினார்.தேர்தலுக்கு பின் அதிமுக முடங்கிபோகும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இயற்கையே முடக்கியுள்ளது
இரட்டை இலை சின்னம் தோற்றுப்போக கூடாது என்பதற்காக தான் இயற்கையே இந்த சின்னத்தை முடக்கியுள்ளது என்றும் தமிழிசை கூறியுள்ளார். பலமுனை போட்டி நிலவும் ஆர்கே.நகரில் பாஜக சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications