ஆர்கே நகரில் தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை.. ந.கொ.மு.க வேட்பாளருக்கு ஒதுக்கீடு!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படவில்லை.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படவில்லை.
'நமது கொங்கு முன்னேற்ற கழக' வேட்பாளர் ரமேஷுக்கு குலுக்கல் முறையில் தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், தினகரன் அணி சார்பில் தினகரன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
ஆர்கே நகரில் வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து ஆர்.கே.நகரில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

சின்னம் ஒதுக்கும் பணி
அதன்படி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 59 பேர் போட்டியிடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது.

தினகரனுக்கு இல்லை
முன்னதாக சின்னம் தொகுக்கீடு தொடர்பாக தேர்தல் அலுவலரை டி.டி.வி.தினகரன் சந்தித்து பேசினார். ஆனால் அவருக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படவில்லை.

நகொமுக வேட்பாளருக்கு ஒதுக்கீடு
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நமது கொங்கு முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ரமேஷுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. டிடிவி.தினகரன் தொப்பி சின்னம் கேட்டிருந்த நிலையில் வேறொருவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கைவிட்ட ஹைகோர்ட்
இரட்டை இலைச்சின்னம் கைவிட்டுப்போனதை தொடர்ந்து இடைத்தேர்தலில் தொப்பி சின்னம் ஒதுக்கக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் தினகரன் தரப்பு மனுத்தாக்கள் செய்தது. ஆனால் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் எனக்கூறி தினகரனின் மனுவை கடந்த வாரம் தள்ளுபடி செய்தது டெல்லி ஹைகோர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications