பாஜக - அதிமுக இடையே எவ்வித மறைமுக உறவும் இல்லை - இல.கணேசன் சுளீர் பேட்டி
வேலூர்: அதிமுகவுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே மறைமுக உறவு எதுவும் இல்லை என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் சட்டசபைத் தொகுதி பாஜக சிறப்பு ஆய்வுக்கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் இல.கணேசன் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே மறைமுக உறவு எதுவும் இல்லை.

சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமின்றி கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே நல்லுறவு வேண்டும் என்பதற்காகவே பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை அரசியல் ஆக்கக் கூடாது.
கச்சத் தீவை மீட்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் கொள்கை. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அதனை இலங்கைக்குக் கொடுத்தார். அதற்கு பாஜக அப்போதே எதிர்ப்பு தெரிவித்தது. கச்சத்தீவு நம்மிடம் இருந்தால் தமிழக மீனவர்களுக்கு எத்தகைய வசதிகள் கிடைக்குமோ அத்தனையையும் பெற்றுத் தர பாஜக தற்போது முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் மத்திய அரசுக்கு தேவையான உதவிகளை அளிக்க இலங்கை அரசும் தயாராக உள்ளது.
இந்திய மீனவர்கள் கடல் எல்லை தாண்டி இலங்கையில் மீன் பிடிப்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதிக்கவில்லை. ஆனால் நமது மீனவர்கள் இரட்டை மடிப்பு வலையைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அவர்களின் நிபந்தனை. மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு இதுவரை தமிழக மீனவர்கள் ஒருவர்கூட இலங்கை அரசால் சுட்டுக் கொல்லப்படவில்லை.
உள்ளாட்சித் தேர்தலில் தற்போதைய பாஜக கூட்டணியே தொடரும். மக்கள் நலக் கூட்டணி ஒரு பொருத்தமல்லாத கூட்டணி. தேர்தலில் வெற்றி பெறாததால் அதன் கூட்டணிக் கட்சிகள் தானாகப் பிரிந்துவிடுவது இயற்கையே என்றார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications